திருவொற்றி யூரில் சட்டமன்ற உறுப்பினர் மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்த பள்ளியில் வரவேற்றார்

திருவொற்றி யூரில் சட்டமன்ற உறுப்பினர் மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்த பள்ளியில் வரவேற்றார்

சென்னையில் நவம்பர் 1 திருவொற்றியூர்
தமிழக அரசு கொரோனோ விதிகளை தளர்த்தி இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம் என அறிவித்திருந்தது கடந்த 19 மாதங்களுக்கு பின்பு இன்று முதல் முறையாக பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளிகளில் சிறப்பான ஏற்பாடுகள் மாணவர்களுக்கு செய்யப்பட்டிருந்தது. இதில்

திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி பொன்னாடை போர்த்தி பேனா மற்றும் ரோஜா பூக்களை வழங்கி கே.பி.சங்கர் எம்.எல்.ஏ வரவேற்பு அளித்தார் அருகில் பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ராமநாதன் விவேகானந்தன் கே.பி. சொக்கலிங்கம் கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வகுப்பறைகளில் ஏற்கனவே வர்ணம் தீட்டப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு உள்ளே அனுமதிக்கவில்லை மாணவர்களுக்கு வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அழைக்கப்பட்டனர் மாணவர்களும் ஆசிரியர்களும் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

District News