புனுகு சாம்பிராணி தைலாபிஷேக கார்த்திகை தீப உற்சவம்
பூலோக சிவலோகம் என்று அழைக்கப்படும் மிகவும் பழமை வாய்ந்த சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் கார்த்திகை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு வியாழன் வெள்ளி சனி ஆகிய தினங்களில் கவசம் இல்லாமல் ஆதிபுரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்
சுயம்புலிங்கமாக புற்று வடிவில் தோன்றிய ஆதிபுரீஸ்வரர் மிகவும் பழமை வாய்ந்தவர் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தானாக தோன்றியதாகவும் ராமனின் மகன் லவா பிரதோஷம் தினத்தன்று இங்கு வந்து வழிபட்டது கோவில் ஸ்தல புராணம் இந்த மூன்று நாட்களும் ஆதிபுரீஸ்வரர் மகாபிஷேகம், புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம், நடைபெறும் ஆண்டுக்கு ஒரு முறை மூன்று தினங்கள் மட்டுமே கவசம் இன்றி சுவாமியை பரிபூரணமாக தரிசிக்க முடியும் இதனால் பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வருகை தருவார்
கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது
அபிஷேகத்திற்கு தேவையான தரமான சாம்பிராணி தைலம் திருக்கோவில் மூலமே விற்பனை செய்யப்படும் வெளியிலிருந்து கொண்டு வரும் சாம்பிராணி தைலம் அபிஷேகத்திற்கு ஏற்றுக்கொள்ள மாட்டாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் வியாழன் மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் துவங்கப்படும் இந்நிகழ்வானது சனிக்கிழமை இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் நிறைவுபெறும் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.