SRINIVASAN RAJALAKSHMI MEMORIAL HOSPITAL

கோதாவரி என்கிற 103 வயது மூதாட்டி 30.10,2021 அன்று தனது படுக்கையில் இருந்து கீழே தவறி விழந்து பலத்த காயங்களுடன் அவரது மகன் திரு . சுப்பிரமணியன் 78 வயது அழைத்து வரப்பட்டார் . அவரை பரிசோதித்ததில் முகம் கை ஆகிய இடங்களில் காயங்களுடன் வலது கையை அசைக்க முடியாமல் இருந்தார் மிகுந்த வலி மற்றும் வேதனையில் தவித்து கொண்டிருந்தார் .

ஊடுகதிர் பரிசோதனையில் அவருக்கு தோல் பட்டை எலும்பு சுக்குநூறாக உடைந்து காணப்பட்டது . எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் மணிகண்டன் அவரை பரிசோதித்து அவருக்கு அருவை சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும் என்று நெரிவத்தார் .

அன்னாரது மகன் மேற்படி சிகிச்சைக்கு சம்மதம் தெரிவத்ததால் இருதய நிபுணர் பொது மருத்துவர மயக்க நிபுணர்ஆகியோர் கலந்து ஆலோசித்து அவர் அருவை சிகிச்கை மிகவும் உயிருக்கு ஆபாத்தானது என்பதை தெரிவித்து அருவை சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டது .

வயது காரணமாக பொது மயக்கம் கொடுக்க முடியாத சுழ்நிலையில் மயக்க மருத்துவநிபுணர் குழூஅவருக்கு நரம்பு மரப்பு சிகிச்சை மூலமாக அவருக்கு கை மட்டும் மறத்து போகுமாறு செய்தனர். மிக விரைவாக செயல் பட்டு டாக்டர் மணிகண்டன் குழூவினர் அருவை சிகிச்சை செய்து எலும்பை ஒன்று சேர்த்து பேலேட் மற்றும் திருகாணிகள் மூலம் ஒன்று சேர்த்தனர் . பாட்டி அருவை சிகிச்சைக்கு பின் வேகமாக உடல் நலம் நேறி தற்சமயம் அவரது தையல்கள் பிரிக்கப்பட்டு வலி இல்லமாவ் பூரன குணமடைந்து தனது இல்லம் செல்கிறார் .

மருத்துவ குழுவினர்

1.டாக்டர் . கிருஷ்ணன்

2.டாக்டர் . மணிகண்டன் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர்

3.டாக்டர் . சிவக்குமார் மயக்க நிபுணர்

4.டாக்டர் . ராதா மயக்க நிபுணர்

5.டாக்டர் . தன்ராஜ் இருதய நிபுணர்

Health