திருநெல்வேலி மாநகராட்சியில் தொடரும் கட்டிட விதிமீறல்!
கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்!
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் பல்வேறு மருத்துவமனை மற்றும் வணிக வளாக கட்டிடங்கள் உள்ளூர் திட்ட குழுமம் விதிகளின் படியும் திருநெல்வேலி மாநகராட்சியின் விதிகள் படியும் கட்டமைக்காமல் தான்தோன்றித்தனமாக கட்டிடங்களை பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வண்ணம் தீயணைப்பு துறையின் தடையின்மை சான்றிதழ் பெறாமல் கட்டிடம் கட்டி வருகிறார்கள்.
இதனை பலமுறை சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் அவர்கள் மாநகராட்சிக்கு எடுத்துரைத்தும், இத்தகைய கட்டடங்கள் மீது புகார் மனுக்கள் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் உதவி ஆணையர்கள் இருந்தும் அவர்கள் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டே இத்தகைய கட்டிட விதிமீறல்களை அனுமதித்திருப்பது பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை உண்டாகி உள்ளது.
மேலும் திருநெல்வேலி மாநகராட்சிக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கட்டிட விதி மீறலில் ஈடுபட்ட கட்டிடங்கள் மீது கோரப்படும் தகவல்களுக்கு சரிவர பதிலளிக்காமலும் அலட்சியம் காட்டி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை உண்டாக்கி உள்ளது.
இதை தொடர்ந்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையை சார்ந்த வழக்கறிஞர்களும் திருநெல்வேலி மாவட்ட நீதி மன்றத்தை சார்ந்த வழக்கறிஞர்களும் மாநகராட்சி ஆணையருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மீது கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கப்படுகிறதா என்ற வண்ணம் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாக திருநெல்வேலி மற்றும் மதுரை வட்டாரங்களில் செய்தி பரவலாக பரவி வருகிறது.
திறம்பட செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கு திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தின் இத்தகைய அலட்சிய செயல்கள் பெரும் சவாலாக அமைய போவதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இதை தொடர்ந்து திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுகவின் முக்கிய புள்ளி ஒருவரின் ஆதரவாளர்கள் பாளையங்கோட்டை மண்டல அலுவலர்களுக்கு கட்டிட விதிமீறலில் ஈடுபட்ட ஒரு கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற வண்ணம் அழுத்தம் கொடுப்பதாக செய்தி கசிந்துள்ளது.