கனமழை காரணமாக இதுவரையில் 5 பேர் உயிரிழந்திருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

கனமழை காரணமாக இதுவரையில் 5 பேர் உயிரிழந்திருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

வெள்ள நிவாரண நிதி குறித்து முதல்வர் பரிசீலித்து முடிவு எடுப்பார் என வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், இதுவரை இல்லாத அளவிற்கு தென் மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளதாகவும் இதனால் அப்பகுதிகளில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறிய அமைச்சர் தேவைப்பட்டால் மூன்றாவது நிதியாக மத்திய அரசிடம் கோருவோம் என தெரிவித்தார்.

மேலும் தற்போது சென்னையில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தேங்கி இருக்கும் மழை நீருக்கு கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சி செய்த அதிமுக அரசுதான் என்று குற்றம் சாட்டிய அமைச்சர் மழைநீரை உடனடியாக வெளியேற்றும் பணியை அதிகாரிகள் ஊழியர்கள் செய்து வருவதாகவும் கூறினார்

இதுவரை இல்லாத அளவிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்துள்ள நிலையில் அங்கு 14 முகாம்களில் 639 தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் நிவாரண பணிகளை ஆட்சியர்கள் ஆங்காங்கே துரிதமாக செய்து வருவதாகவும் கூறினார்

கனமழை காரணமாக ஒரு சில பாதிப்புகள் இருந்தால் கூட எதிர்வரும் காலங்களில் குடிநீர் பிரச்சனையை தவிர்க்கும் வண்ணம் இந்த கனமழை இருக்கும் என கூறிய அமைச்சர், நேற்று பெய்த மழையால் திருவண்ணாமலை 2 பேரும், திண்டுக்கல், சிவகங்கை அரியலூர் மாவட்டத்தில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்திருப்பதாக கூறினார்.

கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் கருவி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கூறிய அமைச்சர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்து முதல்வர் அறிவிப்பார் எனவும் கூறினார்

திருச்செந்தூரில் தேங்கிய மழைநீர் தற்போது வடிந்து விட்டதாகவும் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் துரிதமாக செயல்பட்டு வருவதாகவும் கூறிய அமைச்சர் மழை போன்ற பேரிடர் காலங்களில் பொது மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் கேட்டுக்கொண்டார்

செங்கல்பட்டு,
திண்டுக்கல், காஞ்சிபுரம்,
திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி உல்லிட்ட 109 முகாமில் இதுவரை 9903 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

1079.72 முதல்கட்டமாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்

பருவ மழையால் ஏற்பட்ட பேரிடர் நிதியிலிருந்து மத்திய அரசிடம் 4625.80கோடி எடுக்கப்பட்டுள்ளதாகவும்

தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் தேவைப்பட்டால் மூன்றாம் கட்டமாக நிதியை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

மழை பாதிப்புகளை தமிழக அரசு கூர்ந்து கண்காணித்து வரும் நிலையில் சாலை போக்குவரத்து எங்கேயும் துண்டிக்கப்பட வில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

District News