மாண்புமிகு டாக்டர் எம். மதிவேந்தன், சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்கள் சர்வதேசப் புகைப்பட விழா தொடங்கி வைத்தார்.

டிசம்பர் 9, செய்தியாளர் சந்திப்பு _ சென்னை போட்டோ பயன்னலே மூன்றாம் பதிப்பு
Chennai Photo Biennale Edition III 
சென்னை போட்டோ பயன்னலே மூன்றாம் பதிப்பு
சென்னை ஃபோட்டோ பயன்னலேயின் மூன்றாவது பதிப்பு 9 டிசம்பர் 2022 முதல் 6 பிப்ரவரி 2022 வரை நடைபெறுகிறது. இதில் டிஜிட்டல் கண்காட்சிகள், நேரடிக் கண்காட்சிகள், இணைய இதழ்கள், பயன்னலே வெளியீடுகள், கலைஞர்களின் உரைகள், புகைப்பட விருதுகள், மாணவர்களுக்கான நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
● சென்னை புகைப்பட பயன்னலேயின் மூன்றாவது பதிப்பு 2021, டிசம்பர் 9முதல் 2022, பிப்ரவரி 6 நடக்கவிருக்கிறது. இந்த ஆண்டு இந்தியாவில் தொடங்கப்படும் ஒரே பயன்னலே இதுவாகும்.
● சென்னை புகைப்பட பயன்னலேயின் மூன்றாவது பதிப்பை அர்க்கோ தத்தோ, பூமா பத்மநாபன், போஸ் லெவின், கெர்ஸ்டின் மெய்ன்கே ஆகியோர் ஒருங்கிணைக்கிறார்கள். “அமைதியின்மையின் வரைபடம்” எனப் பெயரிடப்பட்டுள்ள சென்னை போட்டோ பயன்னல்லேவின் மூன்றாம் பதிப்பு, எண்ணம், குரல்கள், கலை ஆகியவற்றில் பன்முகத்தன்மையை மீட்டெடுப்பதன் வாயிலாகவும், ஒன்றுபட்டு நிற்பதற்கும் பரிவுக்குமான புதிய வலைப்பின்னல்களை உருவாக்குவதன் மூலமும், பெரும்பான்மைவாதத் திணிப்புகள், சூழலியல் சீரழிவு, தொழில்நுட்பக் கொடுங்கோன்மை ஆகிய நம் காலத்துத் தேவைகள் குறித்த சிந்தனையை எழுப்புகிறது.  
● பயன்னலே தொடங்குவதற்கு முன்னதாக, ‘த்ரூ தி கிளாஸ் டார்க்லி’ (நவம்பர் 27 அன்று வெளியானது), ‘மேப்ஸ் ஆஃப் டிஸ்கியூட்’ (டிசம்பர் மத்தியில்) என்ற தலைப்பில் இரண்டு இணைய இதழ்கள் வெளியாகின்றன. இந்த இதழ்கள் தாம் தேர்ந்துகொண்ட கருப்பொருள்கள் குறித்த எழுத்துப் பிரதிகள், ஒலிப்பதிவுகள், கலைப்படைப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
● பயன்னலேயில் நேரடிக் கண்காட்சிகள், பல்வேறு விதமான திரையிடல்கள், உரைகள், புத்தக வெளியீட்டு விழாக்கள் முதலான பல நிகழ்ச்சிகள் உள்ளன. உரையாடல்கள், புகைப்படச் செயல்பாடு, மாணவர் நிகழ்ச்சிகள், மெய்நிகர் சுற்றுப்பயணங்கள், வழிகாட்டியின் துணையோடு நடக்கும் நேரடிச் சுற்றுப்பயணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இந்த பயன்னலேயில் இடம்பெறும்.

சென்னை புகைப்பட பயன்னலேயின் (CPB) மூன்றாவது பதிப்பு, பல்லூடகங்களின் மூலம் நேரடியாகவும் டிஜிட்டல் வடிவங்களிலும் நிகழ்த்தப்படுகிறது. ஃபோரம் ஆர்ட் கேலரி, அஷ்விதாஸ் கேலரி, ரோஜா முத்தையா ஆரய்ச்சி நூலகம், சென்னை இலக்கியச் சங்கம், கோதே இன்ஸ்டிடியூட் ஆகிய இடங்களில் வீடியோ படைப்புகளின் திரையிடல்கள், நேரடிக் கண்காட்சிகள் ஆகியவை 2021, டிசம்பர் 9முதல் 2022 பிப்ரவரி 6வரை நடைபெறும்.

Launch