கச்சிதமாக பொருந்தக்கூடிய ஹோம் இன்டீரியர்களுக்கு பெயர் பெற்ற டிசைன் கஃபே, சென்னையில் தனது முதல் ஷோரூமைத் தொடங்குகிறது

கச்சிதமாக பொருந்தக்கூடிய ஹோம் இன்டீரியர்களுக்கு பெயர் பெற்ற டிசைன் கஃபே, சென்னையில் தனது முதல் ஷோரூமைத் தொடங்குகிறது
இந்த மையம் அதன் வகையிலான முதன்முதலில் முழுமையாக 1 BHK அபார்ட்மென்ட்டுக்கான இண்டீரியர் வடிவமைப்பை சென்ட்ரல் சென்னையில் காட்சிப்படுத்தும்!

சென்னை, செவ்வாய், 14 டிசம்பர் 2021: பெங்களூரை தளமாகக் கொண்ட டிசைன் கஃபே, ஹோம் இன்டீரியர் தீர்வுகள் நிறுவனமான தனது அனுபவ மையத்தை இன்று சென்னை அண்ணாசாலையில் தொடங்கியுள்ளது. 3,500 சதுர அடி ஷோரூமில் நவீன, பழமையான மற்றும் தொழில்துறை வடிவமைப்பு தீம்களின் உலகளாவிய போக்குகளால் ஈர்க்கப்பட்ட ஆறு அசத்தலான சமையலறைகள் மற்றும் லிபிங் ஸ்பேசஸ் வடிவமைப்புகள் உள்ளன. சென்னை வாடிக்கையாளர்களின் உணர்வுகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப, செயல்படுத்தப்பட்ட டிசைன்களில் ஸ்கர்டிங் டிராயர்கள், டாடோ ஷெல்வ்கள் மற்றும் ஜானிட்டர் யூனிட்கள் போன்ற ஸ்மார்ட் ஸ்டோரேஜ் தீர்வுகளும் பொருத்தப்பட்டுள்ளன.
டிசைன் கஃபேயின் “மோர் ரூம் ஃபார் ஜாய்” என்ற வரிகளை பிரதிபலிக்கும் வகையில், ஷோரூம் ஒரு முழுமையான 1BHK இண்டீரியரை கொண்டுள்ளது, இது ஒரு லிவிங் ஸ்பேஸ், ஓபன் கிச்சன், மாஸ்டர் படுக்கையறை, குழந்தைகள் அறை மற்றும் படிப்பு, அலுவலகம் மற்றும் சாப்பாட்டுக்கான பிரத்யேக பகுதிகளை உள்ளடக்கியது. ஸ்மார்ட் மாடுலர் வடிவமைப்பு தீர்வுகள் மூலம் அவர்களின் அனைத்து தேவைகளையும் நிவர்த்தி செய்வதன் மூலம் இடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும்.

டிசைன் கஃபேவின் இணை நிறுவனர் திருமதி கீதா ரமணன் கூறுகையில், “சென்னை போன்ற புதிய சந்தையில் நுழைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வளர்ந்து வரும் சென்னை வாடிக்கையாளர்களுக்கு உண்மையான மற்றும் புதுமையான ஷோரூமின் ஒவ்வொரு அம்சத்தையும் கவனமாக வடிவமைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளோம். வெயில் அதிகமாக இருக்கும் நகரத்திற்கு பிரத்தியேகமான வார்ம் பேலட்டுகள் மற்றும் நடுநிலையான அலங்காரங்களை கொண்டுள்ளோம். மேலும் வாடிக்கையாளர்கள் இந்த வடிவமைப்புகளை ரசித்து பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன். எங்கள் விரிவான 10-நகர விரிவாக்க உத்தியை சென்னையில் இருந்து தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இது டிசைன் கஃபேயின் மேலும் பல சாதனைகளின் முதல்படியாக இருக்கும் என்று நம்புகிறோம். ” என்றார்.

Launch