சென்னை 17டிசம்பர் 2021: ரியல் எஸ்டேட் துறையில் செயல் திட்டங்களை வகுத்து அளிப்பதற்கான தனி நிறுவனமான பிரேகேட் ரீப் மற்றும் கிரசென்ட் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சில் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. சென்னையில் உள்ள பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் அங்கமாக புதுமை மற்றும் அடைகாப்பு நிறுவனம் உள்ளது. சொத்து மூலதன தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து கிரசென்ட் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சில் நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு காணொலி வழியாக பிரேகேட் நிறுவனம் விளக்கும். இதுவே புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சாரமாகும். சொத்து மூலதன பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் புதிய ஸ்டார்ட் அப்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ள மனித வள அம்சங்களை கிரசென்ட் நிறுவனம் அளித்திடும்.
சொத்து மூலதன தொழில்நுட்பத் துறையின் முதல் செயல்பாட்டுத் திட்டத்தை பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில்,, ஐக்கிய பொருளாதார அமைப்பின் தலைவரும், கிரெடாய் முன்னாள் தலைவருமான திரு டபிள்யூ.எஸ்.ஹபீப், பிரேகேட் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் திரு. ஜான் குருவில்லா, கிரசென்ட் கல்வி நிறுவனத்தின் வேந்தர் திரு ஆரிப் புகாரி ரகுமான், இணை வேந்தர் திரு. அப்துல் காதிர் அப்துல் ரகுமான் புகாரி, சிஐஐசி நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் திரு எம்.பர்வேஷ் ஆலம் ஆகியோர் பங்கேற்றனர்.