சென்னையில் பர்வின் தனியார் பேருந்து ஒன்றில் காற்றை தூய்மைப்படுத்தும் அதிநவீன கருவியான UV 222 என்ற கருவியை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் முன்னாள் அதிகாரி பொன்ராஜ் அறிமுகப்படுத்தினார்.இந்தியாவில் முதல் முறையாக மக்கள் செல்லும் பேருந்துகளில் இது போன்ற கருவி அறிமுகப்படுத்துவதாகவும், விரைவில் ரயில் போக்குவரத்து, அனைத்து அரசு பேருந்துகள், திரையரங்க வளாகங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களிலும் இதுபோன்ற கருவியைப் பொருத்தினால் காற்றில் பரவும் வைரஸ்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறினார்.
கொரோனா, ஒமிக்ரான் போன்ற காற்றில் பரவும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த காற்றை தூய்மைப்படுத்தும் UV 222 எனப்படும் அதிநவீன கருவியை மக்கள் கூடும் இடங்களில் பொருத்த வேண்டும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் முன்னாள் அதிகாரி பொன் ராஜ் வலியுறுத்தியுள்ளார்
பொன் ராஜ்
பாதுகாப்பு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி குழுமம் முன்னாள் அதிகாரி
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழக மீனவர்களை மத்திய அரசு இந்திய மீனவர்கள் ஆக கருதியிருந்தால், இதுபோல் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிகழாது என்றார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவுபடி, பக்கத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்கும் நடைமுறையை அமல்படுத்தினால், இதுபோன்ற மீனவர்கள் மீதான தாக்குதல் பிரச்சினை எழாது என்றும் அவர் கூறினார். தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா ஆயுர்வேதா வுக்கு உரிய ஆராய்ச்சி செய்திருந்தால் ஒருவனுக்கு சிறந்த முறையில் மருத்துவம் அளித்து குணப்படுத்த முடியும் என கூறினார்
இந்நிகழ்வில் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கினைப்பாளர் வசீகரன் மற்றும் பர்வீன் டிராவல்ஸ் முதன்மை இயக்குனர் அப்சல் ஆகியோர் கலந்துக்கொண்டனர்…