செங்கல்பட்டு மாவட்டம் ,மதுராந்தகம் தாலுகா , எலப்பாக்கம் கிராமத்தில் கடந்த அறுபது வருடங்களாக குடும்பத்துடன் வசித்து வருபவர் நாராயணசாமி.
எலப்பாக்கம் கிராமத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் கடந்த அறுபது வருட காலமாக விவசாயம் செய்து, அதன் மூலம் வரும் வருமானத்தில் தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார் .
எலப்பாக்கம் பஞ்சாயத்தில் அரசுக்கு சொந்தமான 56 ஏக்கர் இடத்தில் அங்கு வசித்து வரும் கிராம மக்கள் காலம் காலமாக விவசாயம் செய்து வருகின்றனர்..அப்படித்தான் நாராயணசாமியும் தனக்கு சொந்தமான இடத்திற்கு அருகே , தரிசாக கிடந்த புறம்போக்கு இடத்தை, முப்போகம் விளையக் கூடிய விவசாய நிலமாக மாற்றி அந்த இடத்திலும் அறுபது வருடமாக விவசாயம் செய்துவந்தார்.
கடந்த 2015 ல் நாராயணசாமி இறந்து விடவே அவரது வாரிசுகள் நால்வரும் தொடர்ந்து பயிர் செய்து வருகின்றனர்
அவர்களில் மூவர் சென்னையிலும் ஒருவர் எலப்பாக்கத்திலும் வசித்து வருகிறார்
கடந்த ஜூன் மாதத்தில் நாராயணசாமி வாரிசுகள் பராமரித்து வரும் புறம்போக்கு விவசாய இடத்தில், பயிர் செய்ய கூடாது என்று, அந்த இடத்தில், ஊரில் உள்ள மக்கா பிளாஸ்டிக் குப்பைகளை எலப்பாக்கம் கிளார்க் ஆறுமுகம் கொட்டி உள்ளார் ..
இதனை கண்டிக்கும் விதமாக நாராயணசாமி வாரிசுகளில் ஒருவரான ஸ்ரீதர் என்பவர் மாவட்ட ஆட்சியருக்கும் ,வட்டார வளர்ச்சி அதிகாரி மாணிக்கம் அவர்களுக்கும் மனு கொடுத்துள்ளார் .
கள நிலவரத்தை ஆய்வு செய்த வட்டார வளர்ச்சி அதிகாரி , கிளர்க் ஆறுமுகத்தை நேரில் அழைத்து குப்பைகளை உடனடியாக அகற்றும் படி உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் கிளர்க் ஆறுமுகம் மீண்டும் மீண்டும் குப்பைகளை விவசாய இடத்தில் கொட்டி வருகிறார் .இதில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் அந்த விவசாய இடத்திற்கு அருகில் நீர்நிலை உள்ளது ..நிலத்தடி நீரை சேமிக்க பயன்படும் பனைமரங்கள் உள்ளன.பல வருடங்களாக ஊராட்சி மன்ற தேர்தல் நடக்கவில்லை .சமீபத்தில் நடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் கோவிந்தன் என்பவர் எலப்பாக்கம் பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்று உள்ளார் . தற்போது பஞ்சாயத்து தலைவரும் ஒன்று சேர்ந்து குப்பைகளை கொட்டி வருகின்றார். இதனை கேட்க சென்ற ஊர் மக்களை, ஊரை விட்டே வெளியேற்றி விடுவேன் என்று பஞ்சாயத்து தலைவர் கோவிந்தன், கிளர்க் ஆறுமுகம், ஒன்றிய குழு தலைவர் கண்ணன் மிரட்டுகின்றனர். நிலவரத்தை அறிய சென்ற பத்திரிகையாளர்களை தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். பூமியை பாதுகாக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் மக்காத பிளாஸ்டிக் கவர்களை ஒழிப்பதற்கு கடும் நடவடிக்கை எடுத்து வரும் இந்த நேரத்தில், விவசாய நிலத்தை ஒழித்துக்கட்ட மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை அரசு அதிகாரிகளே கொட்டி வருவதை பார்க்கும் போது, கார்ப்ரேட் கைக்கூலியாக அரசு அதிகாரிகள் மாறி விட்டனரோ என்ற சந்தேகம் எழுவதாக எலப்பாக்கம் ஊர் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.