பிரபல கதக் மேதை பிர்ஜு மகராஜ் அவர்தம் 83 வது வயதில் மரணம்.உத்திரபிரதேசம் தந்தை வழிஎனினும் புது தில்லியில் வாழ்ந்தார்.பத்ம விபூஷன் விருது வாங்கியவர்.இந்திய கிலாஸிக்கல் டேன்ஸர்.கலைக்காகவே வாழ்க்கையை அர்பணித்தவர்.கமல் ஹாசனின் ” விஸ்வருபம்” திரைப்படத்துக்கு கதக் நடனம் இயக்கினார்.சத்யஜித்ரேயன் ” The Chess Players” படத்திலும் நடனம் இயக்கினார்.பிர்ஜுவின் கதக் நடனத்தில் பாத வேலைகளின் சுத்தமும் தெய்வீக முகபாவம் இலட்ச்சனமும் ஈடு இணையில்லாதது.அவரது தும்ரீஸ் மற்றும் தத்ராஸ் சிறப்பானது.சிறந்த கிளாஸ்ஸிக் பாடகருமாவார்.கலை என்று எடுத்துக்கொண்டால் பிர்ஜு வழியில் தமிழ்நாட்டில் கமலும் ஒரு நாட்டிய தொடர்ச்சிதான்.வாழ்க பிர்ஜு மகராஜ்.
மாதவரம் இரா.உதய்பாஸ்கர்.