தமிழ்நாடு: மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட் கோபைன் சர்வதேச வளாகத்தில் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு: மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட் கோபைன் சர்வதேச வளாகத்தில் தொடங்கி வைத்தார்

ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் கோபைன் நிறுவனத்தின் சர்வதேச வளாகத்தில்
3 புதிய பிரிவுகள் ரூ. 500 கோடிக்கும் மேலான முதலீட்டில் தொடக்கம்

சென்னை, தமிழ்நாடு: மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று புளோட் கிளாஸ் பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு மற்றும் செயின்ட்-கோபைன் -சிப்காட் நகர்புற வனம் ஆகிய வற்றை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட் கோபைன் சர்வதேச வளாகத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திரு பெனோயிட் பாஸின், தலைைச் செயல் அதிகாரி, செயின் கோபைன், திரு பி. சந்தானம், தலைமைச் செயல் அதிகாரி, ஆசிய பசிபிக் மற்றும் இந்திய பிராந்தியம், செயின்ட் கோபைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதலீடு செய்து செயல்பட்டு வரும் செயின்ட்-கோபைன் நிறுவனம், தமிழக அரசின் தொலைநோக்கு இலக்கான 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் வகையிலும், பசுமை சூழ் சூழலை உருவாக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரூ. 500 கோடிக்கும் மேலான முதலீட்டில் இந்த வளாகத்தில் உருவாக்கப்பட்ட புதிய பிரிவுகள் மூலம் 200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த முதலீட்டின் மூலம் சர்வதேச தரத்திலான இந்த வளாகத்தில் இந்நிறுவனம் மேற்கொண்ட முதலீடு ரூ. 3,750 கோடியாகும். ஸ்ரீபெரும்பூதூரில் அமைந்துள்ள இந்த சர்வதேச வளாகமானது இக்குழும நிறுவனங்களில் அதிகபட்ச முதலீடு மேற்கொள்ளப்பட்ட ஆலையாகத் திகழ்கிறது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சர்வதேச கண்ணாடி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு விவரங்கள்
புளோட் கிளாஸ் ஆலை
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி 1998-ம் ஆண்டு புளோட் கிளாஸ் பிரிவு தொடக்கத்துக்கு அடிக்கல் நாட்டி அந்த வளாகத்தை செப்டம்பர் 2000-வது ஆண்டில் தொடங்கி வைத்து இந்தியாவில் செயின்ட் கோபைன் குழும வளர்ச்சிக்கு அடித்தளமிட்டார். இன்று இந்த ஆலையானது முழு கொள்ளளவை எட்டியதோடு இதன் உற்பத்தி 130%அதிகரித்துள்ளது. இந்த ஆலையில் பின்பற்றப்பட்ட பிரத்யேகமான வடிவமைப்பினால் மின் நுகர்வு 20% குறைவாக உள்ளது. இந்த புளோட் கிளாஸ் பிரிவானது அதிகபட்ச உற்பத்தி, நவீன தொழில்நுட்பம், பிரத்யேகமான வடிவமைப்பு 4.0 ஆகிய சிறப்பு தன்மைகளை உள்ளடக்கியது.

Launch