ஐக்கிய நாடுகளின் மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின்அழைப்பு (UNCSW66)

ஐக்கிய நாடுகளின் மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின்
அழைப்பு (UNCSW66)

“கோவிட்-19ஐ எதிர்த்த – கோவிட் வீராங்கனைகள் –
போராடிய சிறுதொழில் முனைவோர்கள்

நிகழ்ச்சி ஏற்பாடு: உழைக்கும் மகளிர் சங்கம் மற்றும் பெண்களுக்கான இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம் (சென்னை – தலைமையகம்)

மகளிர் மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் 66வது பதிப்பு (UNCSW66) ஆசியாவில் உழைக்கும் மகளிர் சங்கம் (WWF) பெண்களுக்கான இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம் வரலாற்று ரீதியாக இரண்டாம் முறையாக சென்னைக்கு வழங்கியுள்ளது. மேற்கூறிய 120நிமிட பயிலரங்கம் 21 மார்ச் 2022 அன்று மாலை 4:30 முதல் 6:30 வரை (IST) சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. சென்னை நிகழ்வுக்கான இயங்குலைப் பதிவில், கருத்துக்குறிப்பும் நிகழ்ச்சி நிரலும் இணைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் நியூயார்க் தலைமையகம் இந்த நிகழ்வை கடந்த ஆண்டே சென்னைக்கு வழங்கிது.

உழைக்கும் மகளிர் சங்கம் (WWF) பெருமையான தருணம், தற்போது கூட்டுறவு துறையால் இந்த அங்கிகாரத்தை வென்றுள்ள ஒரே கூட்டுறவு நிறுவனம் இதுவாகும். (அதாவது, தொடர்ந்து மூன்று முறை ஐக்கிய நாடுகளின் மகளிர் கூட்டுறவுக்கான நிகழ்ச்சிகள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அடிமட்ட மகளிர் இயக்கத்தின் பன்னிரெண்டு உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இதை நேரில் காண்கிறார்கள்.) மகளிர் மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் 66வது பதிப்பு (UNCSW66) அரை நூற்றாண்டு கால கூட்டுறவு இயக்கங்களுக்கான இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம் (ICNW) அங்கிகரிப்பதற்காக இது எங்களுக்கு வழங்கப்பட்டது.

சிறப்பம்சங்கள்:

முனைவர் நந்தினி ஆசாத் – தலைவி, உழைக்கும் மகளிர் சங்கம் (WWF) – இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம் (ICNW) பயிலரங்கம் குறித்து தலைமை உரை.

மறைந்த பத்மஶ்ரீ முனைவர் ஜெயா அருணாச்சலம், நிறுவனர், WWF-ICNW அவர்களின் மெய்நிகர் மேற்கோள்கள் காட்சிப்படுத்தப்படும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மையப் புள்ளி, உலகளாவிய கூட்டுறவுகளின் நியூயார்க்கைச் சேர்ந்த அடித்தட்டு பெண்களுடனான கொள்கை பற்றிய வரலாற்று உரையாடலைத் தொடங்குகிறது.
தலைமை: மேடம் வென்யான் யாங், உலகளாவிய உரையாடலுக்கான மேம்பாட்டு கிளை, சமுகமேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகளின் பிரிவு, பொருளாதாரம் மற்றும் சமுக விவகாரங்கள் துறை (UNDESA).

உலகின் மிகப் பழமையான கூட்டுறவு அமைப்பு, சர்வதேச ரைஃபுசென்யூனியன் (IRU). இதன் பொதுச்செயலாளர் திரு. ஆண்ட்ரியாஸ் கப்பேஸ், லத்தின் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க அடிமட்ட கோவிட் வீராங்கனைகள் குறித்து பேசுகிறார்.

இரண்டு ஆசிய ஜாம்பவான்களான திரு. ஷஹீரேஃபுமி கோபயாஷி, நிர்வாக இயக்குனர், ஆசிய விவசாய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனம் (IDACA) மிகப்பெரிய ஜப்பானிய விவசாய கூட்டுறவு நிறுவனம் திரு. ஜா. செஞ்சு அவர்களால் நிர்மாணிக்கப்பட்டது) மற்றும் திரு. யமாகோஷி, தலைவர், சர்வதேச தொடர்புத் துறை – ஜப்பானிய நுகர்வோர் கூட்டுறவு சங்கம் (JCCU). இவர்கள் தங்கள் துறை சார்ந்த அனுபவங்களை பகிர்வார்கள்.

உலக விவசாயிகள் அமைப்பின் (WFO) கொள்கைப் பரிவு தலைவர் மேடம் லூயிசா வோல்டி, இத்தாலியில் இருந்து மகளிர் விவசாயக் கூட்டுறவு குறித்து உரையாற்றுகிறார்.

ஜப்பான், மோஜம்பிக், ஜெர்மனி, ப்ரேசில், இத்தாலி, மியான்மர், இலங்கை, கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, நெதர்லாந்து முதலிய நாடுகளிலிருந்து மகளிர் கூட்டுறவு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்வர்.

WWF-ICNW இது நான்கு தென்மாநிலங்களில் இருந்து (தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகம், தெலுங்கானா) 6,00,000 உழைக்கும் மகளிர், 6,000 கிராமங்கள் மற்றும் 267 வர்த்தகங்களை கொண்டுள்ளது. ICNW நான்கு தென்மாநிலங்களில் 14 கூட்டுறவு வங்கிகளை கொண்டுள்ளது.

District News