திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருவண்ணாமலை
06.08.2021

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் கட்சி பாகுபாடுயின்றி தகுதியுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக மாநில பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை திருவண்ணாமலையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 17981 மனுக்கள் பெறப்பட்டதில் 6755 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது,5260 மனுக்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டது 5966 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இன்று நடைபெற்ற விழாவில் தொழிலாளர் நலத்துறை ,கூட்டுறவுத்துறை, வருவாய் துறை ,குழந்தைகள் பாதுகாப்புதுறை , மாற்றுதிறனாளர் நலத்துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் 1158 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 65 லட்சத்து 91 ஆயிரத்து 670 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநில பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் போசிய அமைச்சர் எ.வ.வேலு,

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் தமிழிகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று திருவண்ணாமலை மாவட்டத்திலும் வழங்கப்பட்டது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் முதன்முதலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் மனுக்கள் பெறப்பட்டது .
இத்திட்டத்தின் மூலம் மனுக்கள் கொடுத்தால் உடனடியக நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதால் நாள் ஒன்று 3 ஆயிரம் மனுக்கள் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் கட்சி பாகுபாடுயின்றி மக்களின் மனங்களை அறிந்து தகுதியுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக கூறினார்.

இவ்விழாவில் சட்டப்பேரவை துனைத்தலைவர் கு.பிச்சாண்டி,
மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்,சட்டமன்ற உறுப்பினர்கள் கலசப்பாக்கம் பெ.சு.தி.சரவணன்,செங்கம் மு.பெ.கிரி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Political