சென்னை,
இந்தியாவின் மிகப்பெரிய தங்கக் கடன் நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் லிமிடெட், சென்னையில் “முத்தூட் சினேகசன்மானம் 2021” ஐ அறிமுகப்படுத்துகிறது. முத்தூத் சினேகசன்மானம் என்பது முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் முன்முயற்சியாகும், இது வயதுமூப்பு, உடல் நலக் குறைவு போன்ற காரணங்களால் அந்தந்த துறையில் தொடர்ந்து செயல்பட முடியாத மூத்த கலைஞர்களுக்கு உதவும் திட்டமாகும். மேலும் வாழ்க்கையை முன்னோக்கி எடுத்துச் செல்ல நிதி ரீதியாக சிரமப்பட்டு வரும் கலைஞர்களையும் ஆதரிப்பதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தந்த கலை வடிவங்களில் மகத்தான பங்களிப்பு செய்த கலைஞர்கள் மற்றும் அத்தகைய கலைஞர்களில் உயிரிழந்தவர்களின் மனைவி ஆகியோர் இந்த நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி பின்வரும் துறையை சேர்ந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் – கிளாசிக்கல் நடனம், மிருத்தங்க கலைஞர்கள், வயலின் கலைஞர்கள், புல்லாங்குழல் கலைஞர்கள், வீணை கலைஞர்கள், பறை கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், தபேலா கலைஞர்கள், நாதஸ்வரம் கலைஞர்கள், மத்தளம் கலைஞர்கள், ஹார்மோனியம் கலைஞர்கள், கட்டம் கலைஞர்கள், பாகவத மேளா / கூத்து கலைஞர்கள், மேடை கலைஞர்கள் மற்றும் பல்வேறு பாரம்பரிய கலை வடிவங்களின் கலைஞர்களுக்கு வழங்கப்படும். பயனாளிகள் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் குழுவால் பட்டியலிடப்படுவார்கள்.
சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள கலைஞர்கள் இந்த நிதி உதவிக்காக விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பம் 2021 ஆகஸ்ட் 25 அல்லது அதற்கு முன்னர் கீழேயுள்ள ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும், முழுமையற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
சுய கோரிக்கை
ஒத்த கலை வடிவங்களில் இரண்டு பிரபலமான கலைஞர்களிடமிருந்து பரிந்துரை
விருதுகள் மற்றும் பாராட்டுகள் ஏதேனும் இருந்தால்
கலை வடிவங்களை அரங்கேற்றிய புகைப்படங்கள் மற்றும்
செய்தித்தாள் கவரேஜ்
வருமான சான்றிதழ் ரூ. 1,00,000 / க்கு கீழ்
சினேகசன்மானத்தின் முதல் பதிப்பு 2015 ஜனவரியில் கேரளாவில் தொடங்கப்பட்டது. முத்தூத் சினேசம்மனம் திட்டத்தின் கீழ் 44 பயனாளிகள் கவுரவிக்கப்பட்டனர். இந்த பயனாளிகள் பல்வேறு பாரம்பரிய கலை வடிவங்களின் கலைஞர்கள் அல்லது அவர்களின் மனைவியிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தொழில் வல்லுநர்களின் படைப்புகளிலிருந்து ஈர்க்கப்பட்டு கற்றுக்கொள்ளக்கூடிய கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் வரவிருக்கும் தலைமுறைக்கு உதவுவதே இந்த முயற்சி. இன்றைய இளைஞர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதற்கும், அந்தந்த துறைகளில் தங்கள் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் இது உதவும்.