கோவை மாநகர பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தி வரும் குதிரையை பிடித்து உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீண்ட நாளுக்கு பிறகு கோவை மாநகராட்சி வ உ சி உயிரியல் பூங்கா ஊழியர்கள் குதிரைகளை மடக்கி பிடித்தனர்
இரவு பகல் என குதிரை சாலையில் செல்லும் வாகனங்களுக்கு வழி விட மறுத்து குறுக்கே நிற்கிறது. துரத்தினால் கடிக்கப் பாய்கிறது. அப்பகுதியில் உள்ள பழக்கடைகளில் பழங்களை பதம் பார்க்கிறது.குதிரையை விரட்டினால் கடிக்கப் பாய்வதால் பொதுமக்கள் அதன் அருகே செல்ல அச்சப்படுகின்றனர்.
சாலையில் செல்லும் போது அவர்களின் பேக்கை இழுத்து கீழே தள்ளுகிறது.இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடக்கின்றனர்.
இந்த குதிரைக்கு உரிமையாளர் யார் என்று தெரியாததால் குதிரையை எங்கே அனுப்புவது தெரியாமல் தவிக்கின்றனர். குதிரையை பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இன்று தீர்வு கணாப்பட்டது முரண்டு பிடித்த குதிறைகளை இலை தழைகளை காட்டி நைஸ் பண்ணியும் வலுக்கட்டயாமாக கோவை மாநகராட்சி வ உ சி உயிரியல் பூங்காவில் அடைத்தனர் பூங்கா ஊழியர்கள் .
மாநகரில் உள்ள குதிரைகளில் துளி தான் பிடிக்கப்பட்டது இன்னும் அதிகம் உள்ளது மெல்ல மெல்ல பிடித்து விடுவோம் என மூச்சு இரைக்க சொன்னர் ஊழியரகள்.