அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்,தியாகி இம்மானுவேல் சேகரனார் 64 ஆவது குருபூஜை விழாவில் கலந்து கொள்ள கோவைக்கு வருகை தரும், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ் ஆகியோருக்கு பிரம்மாண்ட வரவேற்பது கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பாக கோவையில்,நடைபெற உள்ள தியாகி இம்மானுவேல் சேகரனார் 64 ஆவது குருபூஜை விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதய ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞரணி துணைச் செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் பொய்யாமொழி மகேஷ் ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது..இந்நிலையில் விழாவிற்கான ஏற்பாடுகள் பேரவையின் தலைவர் மனுநீதி சோழன் தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.இந் நிலையில், விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலொசணை கூட்டம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஆதி காம்ப்ளக்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.. பேரவையின் தலைவர் மனுநீதி சோழன் தலைமையில் நடைபெற்ற இதில்,கோவை,ஈரோடு,திருப்பூர்,நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில்,விழாவில் கலந்து கொள்ள வரும், திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதய ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞரணி துணைச் செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் பொய்யாமொழி மகேஷ் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது,மேலும் தேவேந்திரகுல வேளாளர்கள் நீண்டகால கோரிக்கையான பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்குவது, விழாவில் கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட முதல் தொடங்கி பெருவாரியான மக்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற கோவை மாவட்ட தலைவர் பூபதி செயலாளர் பாபு மாநகர தலைவர் டேவிட் ஆகியோர் நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்,மின்னல் நாகராஜ், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மருதம் சக்தி, சந்திரசேகர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுந்தர், காளிதாஸ்,ரகு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பாபு, கார்த்திக் மற்றும் அமைப்புச் செயலாளர் சதீசு மள்ளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..