அகில இந்திய SC/ST ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் தென்மண்டல பொதுச்செயலாளர் ஞானசேகரன் தலைமையில் தனியார்மயத்தை ரயில்வேயில் நடைமுறைப்படுத்துவதை எதிர்த்து தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம்

அகில இந்திய SC/ST ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் தென்மண்டல பொதுச்செயலாளர் ஞானசேகரன் தலைமையில் தனியார்மயத்தை ரயில்வேயில் நடைமுறைப்படுத்துவதை எதிர்த்து தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம்


அகில இந்திய SC/ST ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் தென்மண்டல பொதுச்செயலாளர் ஞானசேகரன் தலைமையில் தனியார்மயத்தை ரயில்வேயில் நடைமுறைப்படுத்துவதை எதிர்த்து தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் வேளச்சேரி EMU கிளையில் நடைபெற்றது பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அகில இந்திய SC/ST ரயில்வே தொழிற்சங்கத்தின் தென்மண்டல பொதுச்செயலாளர் ஞானசேகரன் அண்ணல் பி.ஆர் அம்பேத்கர் அவர்களின் விடா முயற்சியின் பயனாக இந்திய அரசியல் சட்டத்தின் மூலம் SC / ST தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன இட ஒதுக்கீடு முறையை தனியார் பங்களிப்பு என்ற பெயரில் அடியோடு ரத்து செய்யும் திட்டத்தையும் எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு இல்லாமல் ஏற்படும் நிலையை எதிர்த்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறுவதாகவும் மேலும் ரயில்வே மற்றும் மத்திய அரசுத் துறைகளில் தனியார் மயத்தை புகுத்துவதை கைவிட வேண்டும் ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களில் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் புதிய பென்சன் திட்டத்தில் குளறுபடிகளை உடனே நீக்க வேண்டும் தமிழகத்தில் ஏற்படும் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 70% வேலைவாய்ப்பை மண்ணின் மைந்தர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெறுவதாக தெரிவித்தார்

District News