சென்னை மிராக்கி ரோட்டரி கிளப் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கிழ்பாக்கம்இணைந்து நடத்தும் 100 பெண்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம் துவக்கம் விழா

சென்னை மிராக்கி ரோட்டரி கிளப் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கிழ்பாக்கம்இணைந்து நடத்தும் 100 பெண்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம் துவக்கம் விழா


சென்னை மிராக்கி ரோட்டரி கிளப் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கிழ்பாக்கம்இணைந்து நடத்தும் 100 பெண்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம் துவக்கம் விழா இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோல பெருமாள் செட்டி வைஷ்ணவா பள்ளியில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ரோட்டரி கிளப்பின் தலைவி ராஜேஸ்வரி கார்த்திகேயன்

பெண்கள் தனியாக சுயதொழில் செய்வதற்கான நாங்கள் 15 நாட்களில் 100 பெண்களுக்கு இலவசமாக தொழிலைக் கற்றுக் கொடுத்து வேலைவாய்ப்பு வழிகாட்டுவதற்காக இந்த விழா இன்று நடைபெற்றது

இதில் குறிப்பாக 100 பெண்களை 5 குழுவாக பிரித்து உள்ளதாகவும் தையல், ஆரி கைத்தையல், ஊறுகாய் மற்றும் அப்பளம் தயாரிக்கும் முறை, இயற்கை உரம் தயாரிக்கும் முறை, கணினி பயிற்சி என ஒவ்வொருவருக்கும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இலவசமாக ஐந்து தொழில் முறைகளை கற்றுக் கொடுத்து வேலை வாய்ப்பினை வழங்க உள்ளதாக தெரிவித்தார்

இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் சுயமாகவும் சுதந்திரமாகவும் பணிபுரிவார்கள் என்பதை நாங்கள் முழுமையாக நம்புவதாகவும் கூறினார் இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் மற்றும் பயிற்சி பெறும் பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

District News