வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் தமிழ் நாடு தீயணைப்பு துறையினர் முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்த்தினர்


தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சென்னை புறநகர் மாவட்டத்தின் சார்பாக எண்ணூரில் அமைந்துள்ள நெட்டுகுப்பம் முகத்துவாரத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரப்பர் படகு மூலம் தண்ணீரில் தத்தளிப்பு அவர்களை எப்படி மீட்பது முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது வெள்ள நீரில் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் அவர்களை காப்பாற்றி கரைக்கு மீண்டு வருவது போன்ற ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. ஒத்திகைப்பயிற்சியில் அப்பகுதி மீனவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் மழைக்காலங்களில் வெள்ளநீர் சூழ்ந்த இடத்தில் தங்களை எவ்வாறு காப்பாற்றிக்கொள்வது என்பது குறித்த தீயணைப்பு வீரர்களின் மூலம் செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

குறிப்பாக வீடுகளில் உள்ள காலி தண்ணீர் குடங்கள், வாட்டர் பாட்டில், இரப்பர் ட்யூப், காலி தண்ணீர் பாட்டில் வாழை மட்டை, தெர்மோகோல், காலி எல்பிஜி சிலிண்டர் போன்ற பொருட்களை மிதவைகளாக பயன்படுத்தி எவ்வாறு வெள்ள நீரில் இருந்துதப்பித்துக் கொள்ளலாம் என்பது போன்ற செயல்முறை விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது

சென்னை புறநகர் மாவட்ட அலுவலர் அவர்களின் உத்தரவிற்கிணங்க உதவி மாவட்ட அலுவலர்களின் அறிவுரை படி எண்ணூர் நிலைய அலுவலர் திரு வெ.பலகார ராமசாமி அவர்களின் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 10 பேர் கொண்ட குழுவுடன் நெட்டுகுப்பம் முகத்துவாரம் பகுதியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது

கடலும் ஆறும் சந்திக்கும் இடத்தில் எண்ணூர் நெட்டுகுப்பம் பகுதியில் பருவமழையின் போது கொசஸ்தலை ஆறு புழல் ஏரி உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு அதிகமானால் எண்ணூர் முகத்துவாரம் வழியாக தான் மழை நீர் கடலில் கலக்கும் என்றும் இப்பகுதியில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறை சார்பில் இதுபோன்று ஒத்திகை நிகழ்ச்சி நடத்தியது மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

District News