எம்ஜிஎம் ஹெல்த்கேரில் வங்கதேசத்தை சேர்ந்த நோயாளி ஒருவருக்கு இந்தியாவின் முதல் மினிமலி இன்வேசிவ் நரம்பியல் அறுவைசிகிச்சை


சென்னையின் இதயப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து அதி நவீன வசதிகளும் கொண்ட மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர் , நாட்டிலேயே முதன் முறையாக வங்கதேசத்தைச் சேர்ந்த 28 வயதான நோயாளி ஒருவருக்கு நரம்பு மண்டலத்தில் சி.டி வழிகாட்டுதலுடன் கூடிய மினிமல் இன்வேசிவ் எனப்படும் உடலில் பெரிய காயம் ஏற்படுத்தாமல் மிகச் சிறிய அளவில் துளையிட்டு செய்யப்படும் சிகிச்சை முறையை வெற்றிகரமாக செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது . இந்த நரம்பியல் சிகிச்சை செயல்முறை கடந்த செப்டம்பர் 7 , 2021 அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது . இந்த சிக்கலான சிறு துளை வழியாக செய்யப்பட்ட வலி நிவாரண அறுவைசிகிச்சையை எம்ஜிஎம் ஹெல்த்கேர் நியூரோ சயின்சஸ் அன்ட் ஸ்பைன் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் கே.ஸ்ரீதர் தலைமையிலான பல்வேறு மருத்துவ பிரிவுகளைச் சேர்ந்த குழுவினர் நிகழ்த்தினர் .

Health