திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனையில்திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே பி சங்கர் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்


வெளிநாடுகளில் பரவலால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படுமென வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி தெரிவித்தார்.

திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனையில் தடுப்பூசி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே பி சங்கர் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் அவருக்கு மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி ஊசியை செலுத்தினார் இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டனர் அப்போது டாக்டர் கலாநிதி வீராசாமி செய்தியாளரிடம் கூறியதாவது தமிழ்நாடு அரசு எடுத்துவரும் தீவிர முயற்சிகளில் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து கணிசமாக குறைந்து வருகிறது இதுவரை 4 கோடி பேருக்கும் மேல் முதல் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது இதன் மூலம் எதிர்காலத்தில் நோய்த்தொற்று பரவலை முற்றிலுமாக தடுக்க இயலும் மாநில அரசின் தீவிரமான செயல்பாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மத்திய அரசும் தடுப்பூசிகளை தொடர்ந்து அளித்து வருகிறது தடுப்பூசி ஆண்டுதோறும் மீண்டும் மீண்டும் போட வேண்டுமா என்பது எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை அப்படி ஆண்டுதோறும் தடுப்பூசி போடப்பட வேண்டும் எனில் இந்தியாவில் உள்ள 140 கோடி பேருக்கும் தடுப்பூசி வைத்திருக்கவேண்டும் எனவே தான் செங்கல்பட்டில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனத்தின் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது மத்திய நேரடியாக உற்பத்தியை தொடங்க வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வேண்டுகோள் விடுத்திருந்தார் ஆனால் இது பற்றி இதுவரை மத்திய அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை இம்மையம் உற்பத்தியை தொடங்கினால் ஆண்டுக்கு சுமார் 160 கோடி தடுப்பூசி சேலை உற்பத்தி செய்ய முடியும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் மருத்துவம் செய்வதற்கான பதிவுகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது கொரோனா பரவல் காரணமாக தாங்கள் படித்த நாடுகளுக்குச் சென்று ஓர் ஆண்டு மருத்துவ பயிற்சியை நிறைவு செய்யாததால் இங்கு மருத்துவத் ஆக பதிவு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது இதே போல வெளிநாடுகளில் தற்போது படித்து வரும் மருத்துவ மாணவர்கள் அந்நாடுகளுக்கு செல்வதில் தொடர்ந்து தாமதம் ஆகிறது இது குறித்து ஒரு மாநிலம் மட்டுமே எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு விடமுடியாது இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம் தான் தகுந்த விதிமுறைகளை வகுத்து அளிக்கவேண்டும் இதுகுறித்து மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார் கலாநிதி இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் டாக்டர் செல்வராஜ் குமார் திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே பி சங்கர் உள்ளிட்டோர் கேபி சொக்கலிங்கம் தலைமைக் கழக பேச்சாளர் கருணாநிதி வழக்கறிஞர் ஜெய்சங்கர் உட்பட பலர் இருந்தனர்..

Health