தேர்தலுக்காக உபயோகப்படுத்திய வாடகை வாகனங்களுக்கு வாடகைத் தொகை கொடுக்காத தேர்தல் ஆணையத்தை கண்டித்து உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்

தேர்தலுக்காக உபயோகப்படுத்திய வாடகை வாகனங்களுக்கு வாடகைத் தொகை கொடுக்காத தேர்தல் ஆணையத்தை கண்டித்து உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது .
நடந்து முடிந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு பணிக்காக உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பாக திருவொற்றியூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்காக வாகனங்களை சேவைக்கு அனுப்பியது .
அதே போல் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் ஆர்.டி.ஓ அதிகாரிகள் கேட்டுக் கொண்டதின் பேரில் வாகனங்கள் இயக்கப்பட்டது.

தேர்தல் முடிந்து 20 நாட்களில் தருவதாக வாக்குறுதி அளித்த நிலையில் இன்று வரை பணம் எதுவும் கொடுக்கவில்லை

தேர்தல் முடிந்து 6 மாதங்கள் ஆகியும் இன்னும் நிலுவைத் தொகையை கொடுக்கவில்லை .
ஓட்டுநர்கள் பெரு முதலாளிகள் இல்லை. இதனால் நாங்கள் பெரும் இழப்பை தினமும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
தேர்தல் ஆணையம் ஓட்டுநர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காத காரணத்தால் தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். முதல்வர் ஒரு தீர்வை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறதுஎன்று இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.

தலைமையில்
இ.சே.சுடர் வேந்தன்
உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம்

சு.ஆ.பொன்னுசாமி
தலைவர்
நம்மவர் தொழிற்சங்க பேரவை
மக்கள் நீதி மய்யம்

அ.ஜாஹிர் ஹுசைன்
பொதுச் செயலாளர்
உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம்

கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி
ஆணி ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்

District News