சென்னை கிண்டியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எம்.ஆர்.சி நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக நிலமோசடி செய்துள்ளது .அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களை குத்தகை , வாடகை ஏதும் செலுத்தாமல் போலி ஆவணங்கள் தயாரித்தும் ஆக்கிரமிப்பு செய்தும் எம்.ஆர்.சி நிறுவனம் நீண்ட கலாமாக மோசடியில் ஈடுபட்டுள்ளது . இது தொடர்பாக 29.09.2021 தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனு தரப்பட்டுள்ளது . அரசாங்கம் எம்.ஆர்.சி நிறுவனத்தில் மெகா நிலமோசடிகளை வருவாய் துறை காவல்துறையின் நிலமோசடி பிரிவு குற்றப்பிரிவு மற்றும் மத்திய அரசின் சி.பி.ஐ. , என்.ஐ.எ , Enforcement Directorate போன்ற துறைகள் வருமானவரித்துறை மூலம் விசாரணை செய்ய வேண்டும் . உண்மைகளை கண்டறிந்து பெரும் மோசடி முதலைகளிடமிருந்து பல ஆயிரம் கோடி மதிப்பிலான நிலங்களை மீட்க வேண்டும் . இதனால் அரசு பெரிய அளவிலான நிலத்தை கையகப்படுத்த இயலும் . ஏமாற்றப்பட்ட தனியார்களின் சட்டபூர்வமான வாரிசுகளுக்கு நிலத்தை மீட்டு தர வேண்டும் . இது தொடர்பாக அரசுக்கு உதவ ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் அளிக்க வழக்கறிஞர் கேப்டன் புஷ்ப குமார் தயாராக உள்ளார் . மத்திய , மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கவும் , பொது மக்களை ஒன்று திரட்டி சிவசேனா ஆர்ப்பாட்டம் மற்றும் பிரச்சாரங்களை மேற் கொள்ளும் .
திருக்கோவில்களில் பக்தர்கள் கடவுளுக்கு காணிக்கையாக தந்த நகைகளை உருக்கி தங்கமாக வங்கிகளில் அடமானம் வைக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் தவறான முயற்சியை சிவசேனா வன்மையாக கண்டிக்கிறது . அரசு இத்தகைய தவறான முடிவுகளை கைவிட வேண்டும் . கோவில் தங்க ஆபரணங்களை வங்கிகளில் அடகு வைக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை . கடவுகள் சிலைகளையும் சொத்துக்களையும் இவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ என்று பக்தர்கள் கவலைப்படுகிறார்கள் . அறநிலையத்துறை அமைச்சரின் விளக்கம் பக்தர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை