நடிகர் சூர்யா அறக்கட்டளை மூலம் பயின்ற தஞ்சை இளைஞர் விஜய் லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

நடிகர் சூர்யா அறக்கட்டளை மூலம் பயின்ற தஞ்சை இளைஞர் விஜய் லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.


நடிகர் சூர்யா அறக்கட்டளை மூலம் பயின்ற தஞ்சை இளைஞர் விஜய் லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் தெற்கு நத்தம் கிராமத்தை சேர்ந்த க.கண்ணன் க.விஜயலட்சுமி ஆகியோர் மகன் இளம்கவி. தஞ்சை. விஜய் இளங்கலை கணிதம் பயின்றவர்.இளம் கவிஞரான விஜய் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் நடிகர் சூர்யா நடத்தி வரும் அகரம் தொண்டு நிறுவத்தின் மூலம் பயின்றவர். இளம் வயதிலேயே கவிதை இலக்கியம் மீது ஆர்வம் கொண்ட இவர் ஹைக்கூக் கவிதை எழுதும் திறமை கொண்டவர்.

சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அலுவலகத்தில் தொடர்ந்து 1.34 நிமிடங்களில் 250க்கு மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளை எழுதி புதிய உலக சாதனை நிகழத்தினார்.

இன்று காலை 11:11 மணி அளவில் ஆரம்பிக்கபட்ட இந்த நிகழ்வு வரை தொடர்ந்தது. நிகழ்வில் லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் உலக சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினார்.

தலைமை செயல் அதிகாரி கார்த்திக் குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தலைமை நிர்வாக அதிகாரி செல்வம் உமா முன்னிலை வகித்தார் நிறுவன முதன்மை நிர்வாகிகளான ஸ்டீபன் சீனிவாசன் சாலமன் தினேஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பத்ம பிரியா தலைமை உரை ஆற்றினார்.
இந்த நிகழ்வினை ஹரிஹரன், இலக்கியா, சஞ்சய், ஐஸ்வர்யா நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

District News