ரெயின்போ மருத்துவமனைஅரிதான மரபியல் பிரச்சனைக்காக எலும்பு மஜ்ஜை மாற்றுசிகிச்சைக்குப் பிறகு எக்மோ சாதனத்தின் கீழ் வைக்கப்பட்ட குழந்தை குணமடைந்து சாதனை

சென்னை, 26 அக்டோபர் 2021: ஒற்றை மரபணு சார்ந்த அழற்சி குடல் நோய் என்ற அரிதான மரபணு பிரச்சனைக்காக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை (பிஎம்டி) மேற்கொள்ளப்பட்ட லோச்சன் என்ற பெயரிலான குழந்தைக்கு வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவர்கள் உதவியிருக்கின்றனர். சிக்கல்களுக்குப் பிறகு இந்த ஆண் குழந்தை, எக்மோ சாதனத்தின் (செயற்கை சுவாசக்கருவி) கீழ் வைக்கப்பட்டிருந்தான். எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொண்ட ஒரு குழந்தைக்கு எக்மோ சிபிஆர் செய்யப்பட்டது இந்தியாவில் இதுவே முதன்முறையாகும். அத்துடன், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையைத் தொடர்ந்து எக்மோ சாதனத்தின் கீழ் வைக்கப்பட்டு, உயிர்பிழைத்த முதல் குழந்தையாகவும் இது இருக்கிறது.

இந்த நிகழ்வு குறித்து டாக்டர். ஆர். கார்த்திக் நாராயணன் தனது சிந்தனைகளை பகிர்ந்துகொண்டபோது, “99% சாத்தியத்துடன் உயிரிழந்திருக்கக்கூடிய ஒரு குழந்தையை காப்பாற்றுவது முக்கியம் என்றாலும், அதன்பிறகு திருப்திகரமான மூளை நரம்பியல் இயல்பு செயல்பாட்டை குழந்தை கொண்டிருப்பதை உறுதி செய்வதில் தான் உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது. வளர்ச்சிக்கான இழக்கப்பட்ட அளவீடுகளை திரும்ப பெறவும் மற்றும் இயல்பு வாழ்க்கையை குழந்தை வாழ்வதும் முக்கியமானது. அத்துடன், மாற்றுப்பதியம் செய்யப்பட்ட எலும்பு மஜ்ஜை சிகிச்சை வெற்றி பெறுவதை உறுதி செய்வதும் இக்குழந்தைக்கு மற்றுமொரு முக்கியமான அம்சமாக இருந்தது. 1 ஆண்டுக்கும் அதிகமாக ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த நாங்கள், இக்குழந்தை மீது தொடர் கண்காணிப்பை வைத்திருந்தோம். இயன்முறை சிகிச்சை, ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் ஆன்ட்டிவைரல் நோய்த்தடுப்பு முறை, மூச்சுப் பெருங்குழாய்த் திறப்பு சிகிச்சை மற்றும் தொடர்புக்குழாய் அகற்றலுக்குப் பிந்தைய பராமரிப்பு ஆகியவை உட்பட மறுவாழ்விற்கான சிகிச்சை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்ய குறிப்பிட்ட காலஅளவுகளில் மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு வரப்படுவதை மருத்துவர் குழு உறுதி செய்தது,” என்று கூறினார்.

Health