சென்னை, அக்டோபர் 28, 2021: சென்னையின் அதிநவீன மருத்துவ வசதிகள் கொண்ட குவாட்டர்னரி கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர் தன்னுடைய இன்ஸ்டிடியூட் ஆஃப் ஈஎன்டி, ஹெட் அன்ட் நெக் சர்ஜரி மருத்துவர்கள் துபாயைச் சேர்ந்த 60 வயதான நோயாளி ஒருவருக்கு மண்டையோட்டின் அடிப்பகுதியில் ஏற்பட்ட ரத்தநாள கட்டியை அகற்றும் 13 மணி நேர அதிநவீன ஈஎன்டி அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்தியதாக இன்று அறிவித்துள்ளது.
துபாயில் வசித்து வரும் 60 வயதான நபர் ஷங்கர். அவருக்கு மண்டையோட்டின் வலது பக்க அடிப்பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் மிக வேகமாக வளரும் ஊடுருவும் தன்மைகொண்ட கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கட்டி பெரிதாகிக்கொண்டே இருந்ததால் தாங்க முடியாத வலி மற்றும் வலது பக்க காதுகேளாமை, தொடர் தலைவலி, காதுக்குள் இரைச்சல், வலது காதிலிருந்து ரத்தக் கசிவு போன்றவை ஏற்பட்டது. நிலைமை மோசமாகிக்கொண்டே சென்றது, இதன் காரணமாக விழுங்குதல், சுவாசித்தலில் சிரமம் போன்றவையும் ஏற்பட்டது. திரு ஷங்கர் ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் இந்தியாவின் பல முன்னணி மருத்துவமனைகளுக்குச் சென்று நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்றுள்ளார். கடைசியில், இந்த பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த முறையில் சிகிச்சைகளுக்கும் மையத்தை நாடுவது என்ற முடிவுக்கு வந்தார். தன்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், மருத்துவர்களிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட அவர் கடைசியில் பேராசிரியர் டாக்டர் சஞ்சீவ் மொஹந்தி தலைமையில் செயல்படும் சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேரின் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஈஎன்டி, ஹெட் & நெக் சர்ஜரிதான் சரியான இடம் என்று முடிவெடுத்து இங்கு வந்தார்.
இது குறித்து டாக்டர் சஞ்சீவ் மொஹந்தி அவர்கள் கூறுகையில், “கட்டியை அகற்றுவதற்காக பல்வேறு மருத்துவக் குழுக்கள் இணைந்து செயல்பட்டன. அறுவைசிகிச்சைக்கு முன்பு மிகவும் திறமை மிக்க எம்ஜிஎம்-ன் நியூரோ இன்ட்ரவென்ஷன் ரேடியாலஜி நிபுணர்கள் கட்டி உள்ள ரத்த நாளத்திற்கான ரத்த ஓட்டத்தைத் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தினர். செல்களில் ஏற்படக் கூடிய நோய்களை ஆய்வு செய்யும் ஹிஸ்டோபெத்தாலஜி நிபுணர்கள் மிக வேகமாக வளரும் வாஸ்குலார் கட்டியின் தன்மையை உறுதி செய்தனர். எனவே, அறுவைசிகிச்சை சிக்கல்களைத் தவிர்க்க மண்டேயோட்டின் அடிப்பகுதியில் உள்ள மிகப்பெரிய கட்டியை அணுக மிகத் தீவிரமான அறுவைசிகிச்சை திட்டம் உருவாக்கப்பட்டது. மிக முக்கியமான மூளை ரத்த நாள அமைப்புகள் மிகவும் சிக்கலான அணுக முடியாத உடற்கூறு அமைப்பு பகுதியில் இருப்பது அறுவைசிகிச்சை நேரத்தில் மிகவும் சவாலானதாக இருக்கும். முற்றிய நிலையில் உள்ள இந்த உயர் ரத்த நாளக் கட்டியானது முக்கிய நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களை நெருக்கமாகப் பின்பற்றி, மூளையை மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் உள்ள ஏராளமான துளைகள் வழியாக இணைக்கிறது. இதன் காரணமாக ரத்தப்போக்கு, தலைவலி, காதுகேளாமை, பேச்சில் மாற்றம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளை ஒவ்வொரு நாளாகக் வெளிக்காட்டத் தொடங்கியது” என்றார்.