ஜெம் மருத்துவமனையில் சர்வதேச தரம் வாய்ந்த பயிற்சி மையத்தை துவக்கியுள்ளது AMASI MASTI-C இந்த மண்டலத்தில் ஒரு சிறப்பு வாய்ந்த பயிற்சி மையமாக இருக்கும்

சென்னை, அக்டோபர் 30, 2021:
இந்தியாவின் முன்னணி குடல் நோய் மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவமனையான ஜெம் மருத்துவமனை, இந்திய நுண்துளை அறுவை சிகிச்சை சங்கத்துடன் இணைந்து (AMASI), நுண்துளை அறுவை சிகிச்சை மையம் Minimal Access Surgery Training Institute (MASTI-C) ஒன்றை துவக்கியுள்ளது.

சர்வதேச தரம் வாய்ந்த இந்த ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள்முதல் சுகாதார ஊழியர்கள், ஓடி(OT) மற்றும் சிஎஸ்எஸ்டி தொழில்நுட்பம் அறிந்தவர்கள் வரை கொண்ட குழு உள்ளது. மருத்துவ மிண்ணனு கருவிகள், மருத்துவ கருவிகள்போன்றவையும் இந்த பயிற்சி மையத்தில் உள்ளன. மருத்துவ துறையில் உள்ளோரது திறமையை மேம்படுத்திக் கொள்ள இவை பேருதவியாக இருக்கும்.
சென்னை ஜெம் மருத்துவமனையில் அமைந்துள்ள இந்த பயிற்சி மையத்தை, முதன்மை விருந்தினராக, இந்திய அறுவை சிகிச்சை சங்கத்தின் தலைவர் டாக்டர் அபேய் டல்வி மற்றும் தேசிய தேர்வு வாரியத்தின் இயக்குனர் டாக்டர் பவனிந்தர் லால், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் கே.செந்தில் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.மேலும் AMASI-யின் தலைவர் டாக்டர் ஜுகிந்திரா மற்றும் பல உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சி. பழனிவேலு பேசுகையில், “சென்னை ஜெம் மருத்துவமைனயில் நிபுணத்துவம் கொண்ட குழுவுடன்உள்ள இந்த நுண்துளை அறுவை சிகிச்சை பயிற்சி மையத்தை துவக்குவதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இந்த பயிற்சி மையத்தில் இரண்டு உலகத்தரம் வாய்ந்த ஆய்வகங்கள் உள்ளன. அதிநவீன நுண்துளைஅறுவை சிகிச்சைக்கான பயிற்சிக்கும் திறன் மேம்பாட்டிற்கும் இது பயனுள்ளதாக இருக்கும். சர்வதேச தரத்தில் உள்ள இந்த ஆய்வகங்கள், சிறப்பான கற்கும் அனுபவத்தை தரும். இந்த பயிற்சியின்போது, கலந்துரையாடல், விளக்கங்கள், காட்சிஒளி கல்வி மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களுடன் விவாதம் போன்றவை இடம் பெறும். மிகவும் நேர்த்தியான இந்த வகுப்பறையில், 35 இடங்கள் உள்ளன. அதிநவீன தொலை தொடர்பு வசதிகள் இடம் பெற்றுள்ளன. இது சென்னை ஜெம் மருத்துவமனையுடன் 9 அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் கோவையில் உள்ள 7 அறுவை சிகிச்சை அரங்குகளுடனும் தொடர்பில் இருக்கும். வகுப்பில் பங்கேற்போருக்கு இது தெளிவான 3டி மற்றும் 4கே தரத்தில் படங்களை தரும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Health