தமிழகத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராயபுரம் காவல் சரகம் சார்பில் காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வண்ணாரப்பேட்டை காவல்துறை சரக துணை ஆணையாளர் சிவபிரசாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் காவல் துறை அதிகாரி ஜாங்கிட் கலந்துகொண்டு காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார். ஜாங்கிட் பேசியதாவது,

காவல்துறை பற்றி பல தகவல்கள் வந்தாலும், சில நேரங்களில் காவல்துறை பற்றி தவறான தகவல்களும் வெளிவருகின்றன.
காவலர்களின் பணி என்பது மிகவும் கடினமான பணியாகும். ஒவ்வொரு காவலரும் நேரம் பார்க்காமல், உடல்நிலை பற்றி கவலைபடாமல் காவல் பணியை செய்து வருகிறோம். ஓய்விற்கு பிறகு தான் நேரம் மற்றும் உடல்நிலையை நான் பார்த்து வருகிறேன்.
காவலர்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள், எப்போது திரும்பி வருவார்கள் என்பது கூட தெரியாமல் ஒவ்வொரு காவலரும் பணியாற்றி வருகின்றனர். இதனால் காவலருடன் இணைந்து அவருடைய குடும்பத்தாரும் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.
வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் வீட்டின் நிலை, குழந்தைகள் நிலை என்னவாகும் என்பதை சிந்திப்போம்.
நேரம், உடல் நலம் என எதையும் பார்க்காமல் காவலர்கள் பணியாற்றுவதால் தான் அவர்களுடைய சேவை உயர்ந்த தியாகமாகும் என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர்கள் உக்கிரபாண்டியன், முகமது நாசர், இருதயராஜ், ஆய்வாளர்கள் இசக்கிபாண்டியன், இளங்கோ ஆகியோர் உட்பட காவல் துறையினரும், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளும், மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி, சிலம்பாட்டம் உள்ளிட்டவைகளை நடத்தப்பட்டன.. .

District News