பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு
ஆசிரியர்களை கொண்டாடுவோம் அரசும் சமூகமும்: திசைகள் தலைவர் பேச்சு
காரைக்குடி -புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திசைகள் மாணவர் வழிகாட்டி அமைப்பு சார்பாக பள்ளி தலைமை ஆசிரியரை பாராட்டும் நிகழ்வு காரைக்குடியில் நடைபெற்றது.
அதனில் அறந்தாங்கி திசைகள் அமைப்பின் தலைவர் மருத்துவர் தட்சிணாமூர்த்தி பேசுகையில் , ஆசிரியர்களை அனைத்து வகையிலும் ஆனந்தமாக நாம் வைத்துகொண்டால், இந்த சமூகத்தையே அவர்கள் மகிழ்ச்சியாய் மாற்றி அமைப்பார்கள். அரசும், சமூகமும் ஒருங்கிணைந்து ஒன்றாக கொண்டாடப்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள்.அந்த வகையில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் தனது தலைமை பண்பாலும், ஆசிரியர்களை ஒருங்கிணைத்தும், பல்வேறு செயல்பாடுகளை தனது பள்ளியில் தொடர்ந்து நடத்தி,மாணவர்களின் கல்வியையும், அவர்களின் பல்வேறு திறன்களையும், வளர்ப்பதில் முக்கிய பங்காற்றி, ஆசிரியர் சமூகத்திற்கு ஓர் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். அவரது பிறந்த நாளையொட்டி வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்தார். நிகழ்வில் திசைகள் பொருளாளர் முபாரக்,காரைக்குடி பொறியாளர் செல்வமனோகரி ஆகியோர் பங்கேற்றனர்.
பட விளக்கம் : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திசைகள் மாணவர் வழிகாட்டி அமைப்பு சார்பாக தலைமை ஆசிரியரை பாராட்டும் நிகழ்வு காரைக்குடியில் நடைபெற்றது..அதனில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கத்துக்கு பள்ளியின் செயல்பாடுகளை பாராட்டி திசைகள் அமைப்பின் தலைவர் மருத்துவர் தட்சிணாமூர்த்தி ,பொருளாளர் முபாரக், பொறியாளர் செல்வமனோகரி ஆகியோர் புத்தக பரிசு வழங்கினார்.