வருவாய் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மழை பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்தார்.

சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல மாவட்டங்களில்188 முகாம்கள் மூலம் 15016 நபர்கள் தங்க வைக்கப் பட்டனர். சென்னையில் 1048 நபர்கள் 7 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 98350 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது..

சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மழை பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக செங்கல்பட்டில் மயிலாடுதுறை திருவாரூர் ராமநாதபுரம் நாகப்பட்டினம் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அதிக மழை பெய்து வருவதால் இயல்பான நிலையை விட 76 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.
இரவு, பகல் பாராமல் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுடன் தொடர்பு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
மேலும்  அரியலூர் பெரம்பலூர் கள்ளக்குறிச்சி சேலம் தர்மபுரி திருப்பூர் கோயம்புத்தூர் ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் , வட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் எனவும் நாளை கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி இராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை மற்றும் மதுரை விருதுநகர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் தென்காசி திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறினார்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னையில் இரண்டு குழுக்கள், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் தலா ஒரு குழுக்கள் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2000  ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், தாழ்வான பகுதியில் வசிக்கும் 1700 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் கடலூர் அரியலூர் பெரம்பலூர் தூத்துக்குடி ராணிப்பேட்டை திருச்சிராப்பள்ளி திருவண்ணாமலை வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 188 முகாம்கள் மூலம் 15016 நபர்கள் தங்க வைக்கப் பட்டதாகவும் , சென்னையில் 1048 நபர்கள் 7 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 98350 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டதாகவும் கூறினார்..
தொடர்ந்து பேசிய அவர்,  நேற்று மழை பாதிப்பால் 2 பேர் உயிரிழந்ததாகவும் , மொத்தம் 105 பேர் உயிரிழந்ததாகவும் 286 கால்நடைகள் 1814 குடிசைகள் மற்றும் 310 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும் ,  சென்னையில் 464 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், 86 இடங்களில் அகற்றப்பட்டு 378 இடங்களில் பம்புகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது எனவும் மீட்பு பணியில் 54 படகுகள் உள்ளதாகவும் கூறினார். 
சென்னை போல் மற்ற இடங்களில் பெரிதாக எங்கும் தண்ணீர் தேங்கவில்லை என்ற அமைச்சர், மழை காலத்தில் அனைத்து உதவிகளையும் அரசு அனைவருக்கும் செய்து வருகிறது எனவும், தாம்பரம் , முடிச்சூர் வரதராஜபுரம் போன்ற பகுதிகள் மிகவும் தாழ்வான பகுதி என்பதால் தண்ணீர் தேங்குகிறது. ஆயினும் அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் மழை இல்லாத நாட்களில் மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள முடியும் எனவும் கூறினார்.

District News