பாபரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடு ! சென்னையில் எஸ்.டி.பி.ஐ.கட்சிஆர்ப்பாட்டம்

பாபரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடு ! சென்னையில் எஸ்.டி.பி.ஐ.கட்சி
ஆர்ப்பாட்டம்

சென்னையில் எஸ்.டி.பி.ஐ.கட்சி .ஆர்ப்பாட்டம்

1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
1992 ம் ஆண்டு டிசம்பர் 06 அன்று ஒட்டுமொத்த உலகமே விழித்திருந்த நேரத்தில் , அயோத்தியில் முஸ்லிம்களின் இறையில்லமான பாபரி மஸ்ஜித் சங்கபரிவார சக்திகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது .இடிக்கப்பட்டது பள்ளிவாசல் மட்டும் அல்ல , தேசத்தின் இறையாண்மையும் , ஜனநாயகமும் , வழிபாட்டு உரிமையும் , மதசார்பின்மையும் , சிறுபான்மையினரின் நலன்களும் , பாதுகாப்பும் சேர்ந்தே அப்போது தகர்க்கப்பட்டது .எனினும் இந்த பயங்கரவாதத்துக்கு எதிராக நிச்சயம் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்த வேளையில் , பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 27 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2019 நவம்பர் 9 அன்று , நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் , கடந்த செப் .30 அன்று பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் , இந்திய நீதித்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தெறிந்தன. இந்நிலையில், பாபரி மஸ்ஜிதை சட்டவிரோதமாக இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக்கோரி, எஸ்.டி.பி.ஜ.கட்சி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

District News