ஊரகப் பகுதிகளில் திறன் மேம்பாடு திட்டத்தை தொடங்குகிறார்மா ஃபா க. பாண்டியராஜன்மா ஃபா கரியர் சென்டர் (எம்சிசி), ஏழு மாவட்டங்களில் இன்று தொடங்கப்படுகிறது.

ஊரகப் பகுதிகளில் திறன் மேம்பாடு திட்டத்தை தொடங்குகிறார்மா ஃபா க. பாண்டியராஜன்மா ஃபா கரியர் சென்டர் (எம்சிசி), ஏழு மாவட்டங்களில் இன்று தொடங்கப்படுகிறது.

ஊரகப் பகுதிகளில் திறன் மேம்பாடு திட்டத்தை தொடங்குகிறார்

மா ஃபா க. பாண்டியராஜன்

·       மா ஃபா கரியர் சென்டர் (எம்சிசி), ஏழு மாவட்டங்களில் இன்று தொடங்கப்படுகிறது 

·       இந்தியாவின் 748 மாவட்டங்களுக்கு சேவையாற்ற 2023 – ம் ஆண்டுக்குள் 243 மையங்களைத் தொடங்க திட்டம் 

சென்னை, 7 டிசம்பர் 2021: 1992 – ம் ஆண்டில் முறைப்படுத்தப்பட்ட அமைப்பு ரீதியிலான மனிதவள சேவைகளை அறிமுகம் செய்ததன் வழியாக இந்திய வேலைவாய்ப்பு சூழலமைப்பை புரட்சிகரமாக மாற்றிய வெற்றிகரமான தொழில்முனைவோர் தம்பதிகளாக இந்தியாவில் அறியப்படும் திரு. மற்றும் திருமதி. பாண்டியராஜன், கிராமப்புற இந்தியாவிற்காக ‘மா ஃபா கரியர் சென்டர் (MCC) என்ற திறன் உருவாக்கலுக்கான புதிய முனைப்புத்திட்டம் தொடங்கப்படுவதை இன்று அறிவித்திருக்கின்றனர்.  எதிர்கால தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யும் வகையில் அதற்கு SIRANDHA பங்களிப்பை வழங்கும் பணியாளர்களை உருவாக்குவதே இச்செயல்திட்டத்தின் நோக்கமாகும்.  அரசுத்துறைகள் மற்றும் தனியார் துறையில் பெரிய நிறுவனங்களுடனான தனது ஒத்துழைப்பின் வழியாக இன்றைய காலகட்டத்தில் அதிகம் தேவைப்படுகின்ற கரியர் (வாழ்க்கைப்பணி) வழிகாட்டல் திறன் மதிப்பீடுகள், திறன் பயிற்சி, வாழ்க்கைத் திறன்களுக்கான பயிற்சி, பணியமர்த்துதல் ஆகிய சேவைகளை வெவ்வேறு தொழில் பிரிவுகளில் வேலைவாய்ப்பைத் தேடும் கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைய சமுதாயத்தினருக்கு எம்சிசி வழங்கும். 

இந்நாட்டில் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் முன்னணி  மனிதவள சேவைகள் நிறுவனங்களுள் ஒன்றான CIEL HR சர்வீசஸ் மற்றும் மா ஃபா எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் தொடங்கப்பட்டுள்ள எம்சிசி (MaFoi Career Centre), இந்தியாவில் கிராமப்புற மாவட்டங்களுக்காகவே குறிப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 2023 காலண்டர் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 20 இலட்சம் மக்கள்தொகை கொண்டிருக்கின்ற 243 கிராமப்புற மாவட்டங்களில் எம்சிசி(MCC) தொடங்கப்படும்.  இத்திட்டம் தொடங்கப்படுவதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய நகரங்களிலும் மற்றும் சென்னையில் ஒரு மத்திய மையம் உட்பட, மொத்தத்தில் ஏழு அமைவிடங்களில் ஒரே நேரத்தில் இன்று எம்சிசி(MCC) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  

Launch