சென்னை : இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பல்வேறு துறைகளில் சிறப்பான சேவையாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
2022- ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகா எஸ்.தாமோதரன் அவர்களின் சிறப்பான சேவையை அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருதாளர் எஸ்.தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு விழா சென்னை நிருபர்கள் அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொன்னாடை அணிவித்து வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து ,ஐ.ஹெச்.என்.
அமைப்பின் தலைவர் ஏ.பக்தவச்சலம்,பொதுச்செயலாளர் ஏ.ஜெ.ஹரிஹரன்,பொருளாளர் பி.மனோகரன்,இணைச் செயலாளர் இள.அம்பலவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
பத்மஸ்ரீ விருதாளார் எஸ்.தாமோதரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்..கிராமாலயா தொண்டு நிறுவனம் கிராமபுற மக்களின் சுகாதார மேம்பாட்டிற்கு ஆற்றிய பணிகளை பாராட்டி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் கிராமாலயா சேவை சென்றடைந்துள்ளது. இனிவரும் ஐந்தாண்டு காலத்திற்கு மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சுகாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம். சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தி வெளிப்புறங்களில் வீசியெறிவதன் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் சுகாதார பாதிப்புகளையும் தடுக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிகறது என்றார்.
முன்னதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பத்மஸ்ரீ விருதாளர் எஸ்.தாமோதரன் அவர்களை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சாரட் குதிரை வண்டியில் அமர வைத்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திதிற்கு அழைத்து வந்தனர்.