தமிழ்நாடு மின்வாரிய அண்ணா பொது தொழிலாளர் சங்கம் சார்பாக மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றிய 10,592 பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக பணி நிரந்தரம் செய்ய கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்ற வந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முறையான ஆவணங்களை கொண்டுள்ள 10,592 பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யும்படி தமிழக மின்வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்திம் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பின் நகல் கிடைக்கப்பெற்றப்பின் சென்னையில் தமிழ்நாடு மின்வாரிய அண்ணா பொது தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் இளையராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சட்டபோராட்டத்திற்கு கிடைத்த தீர்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளதாகவும், விரைவில் தமிழக முதல்வர், மின்சாரத்துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நேரடியாக சந்தித்து பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தபோவதாகவும் அவர் தெரிவித்தார்.