கதைகளின் நிலம்’ – பள்ளி மாணவர்களின் புகைப்படக் கண்காட்சி தொடக்கம் திருமதி கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தனர்.

கதைகளின் நிலம்’ – பள்ளி மாணவர்களின் புகைப்படக் கண்காட்சி தொடக்கம்
திருமதி கனிமொழி கருணாநிதி, டாக்டர் பி. சந்திர மோகன் ஐஏஎஸ், கான்சல் ஜெனரல் கரின் ஸ்டோல் (கான்சுலேட் ஜெனரல், ஃபெடரல் ரிபப்ளிக் ஆஃப் ஜெர்மனி, சென்னை) ஆகியோர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.

இந்தக் கலை நிகழ்வு தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை நமது வருங்காலக் குடிமக்களின் பார்வையில் வெளிப்படுத்துகிறது.
26 பிப்ரவரி 2022, சென்னை: கோதே-இன்ஸ்டிட்யூட் / மேக்ஸ் முல்லர் பவன் (சென்னை), சென்னை போட்டோ பயன்னலே (CPB – சிபிபி) அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்த ‘கதைகளின் நிலம்’ (A Land of Stories) என்னும் தலைப்புக் கொண்ட புகைப்படக் கண்காட்சியை மாண்புமிகு மக்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி பிப்ரவரி 26, 2022 அன்று அரசு அருங்காட்சியகத்தில் தொடங்கிவைத்தார்.
சென்னை கோதே இன்ஸ்டிட்யூட்/ மேக்ஸ் முல்லர் பவன், சென்னை புகைப்பட பயன்னலே அறக்கட்டளை ஆகியவை கூட்டாக நடத்தும் இந்தக் கண்காட்சியின் தொடக்க விழாவில் டாக்டர் பி. சந்திர மோகன் ஐஏஎஸ் (அரசு சுற்றுலா கலாச்சாரம் மற்றும் சமய அறநிலையத் துறையின் முதன்மைச் செயலர் மற்றும் தலைவர், TTDC), சுற்றுலா இயக்குநர் மற்றும் கன்சல் ஜெனரல் கரின் ஸ்டோல் (கான்சலேட் ஜெனரல், ஃபெடரல் ரிபப்ளிக் ஆஃப் ஜெர்மனி, சென்னை), ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட தனியார் மற்றும் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 40 மாணவர்களின் படைப்புகளை இந்தக் கண்காட்சி காட்சிப்படுத்துகிறது. ஐபோன்களில் படம் எடுப்பது குறித்துச் சிபிபி ப்ரிசம் (CPB Prism) குழந்தைகளுக்கு வழிகாட்டியது. குழந்தைகள் நிலத்தையும் வீட்டையும் தங்கள் படைப்புக்கான வெளியாக ஆக்கித் தொலைபேசிக் கருவிகளில் பல தருணங்களை அழகாகப் படம்பிடித்தனர்.

District News