சிங்கப்பூர் பயணத்துறை கழகம், St+art India பவுண்டேஷன் உடன் இணைந்து தனது SingapoReimagine மறுதுவக்க பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறுபட்ட கலை நிகழ்ச்சியை நடத்துகிறது!

சிங்கப்பூர் பயணத்துறை கழகம், St+art India பவுண்டேஷன் உடன் இணைந்து தனது SingapoReimagine மறுதுவக்க பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறுபட்ட கலை நிகழ்ச்சியை நடத்துகிறது!

சென்னை, 17 மார்ச் 2022: சிங்கப்பூரில் புத்துணர்ச்சியும் புதுமையும் கொண்ட அனுபவங்கள் மூலம் சுற்றுலா பயணிகளின் ஆர்வத்தை மீண்டும் தூண்டும் வகையில், சிங்கப்பூர் தனது ப்ரத்யேக பிரச்சாரத்தின் மூலம் இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கத் தயாராகிறது. முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்காக சிங்கப்பூர் மற்றும் அனைத்து இந்திய நகரங்களுக்கும் இடையே தனிமைப்படுத்துதல் இல்லாத, இருவழி தடுப்பூசி பயண வழித்தடத்தை (Vaccinated Travel Lane (VTL)) 16 மார்ச் 2022 முதல் தொடங்க உள்ளது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

கலாப்பூர்வமான கூட்டு செயல்பாடு குறித்து, சிங்கப்பூர் பயணத்துறை கழகத்தின் இந்தியா, மத்திய, கிழக்கு மற்றும் தெற்காசிய பிராந்திய இயக்குநர் திரு.ஜிபி.ஸ்ரீதர் (Mr. GB Srithar, Regional Director- India, Middle East & South Asia (IMESA), STB) கூறுகையில், “சர்வதேச பயணத்திற்காக சிங்கப்பூர் தற்போது தனது எல்லைகளை மிகுந்த எச்சரிக்கையுடனும், படிப்படியாகவும் திறந்திருக்கிறது. இச்சூழ்நிலையில், புதுப்பிக்கப்பட்ட அம்சங்களுடனான புதுமையான அனுபவங்கள் மற்றும் பயணிகளுக்கு செளகரியமான வகையில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு தரங்களுடன், இந்திய பயணிகளை வரவேற்க நாடு தயாராக உள்ளது.

District News