பார்கின்சன்’ஸ் பாதிப்புள்ள நோயாளிகளுக்காக சென்னையில் நவீன அபோமார்ஃபின் பம்ப்புகள் அறிமுகம்

பார்கின்சன்’ஸ் பாதிப்புள்ள நோயாளிகளுக்காக சென்னையில் நவீன அபோமார்ஃபின் பம்ப்புகள் அறிமுகம்

சென்னை / மார்ச் 17, 2022: சென்னையில் வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனையில் முதிர்ச்சியடைந்த பார்கின்சர் நோய் மீது நடத்தப்பட்ட கல்விசார் கருத்தரங்கில் பங்கேற்ற இத்துறையைச் சார்ந்த உலகின் முதன்மை நிபுணர்கள், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையிலுள்ள அமைவிடமாக இந்தியா உருவாகி வருகிறது என்று குறிப்பிட்டனர். ஏறக்குறைய 580,000 பார்சின்சன் நோயாளிகள் இந்நாட்டில் தற்போது இருக்கின்றனர் மற்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு இலட்சம் நபர்களில் சுமார் 120 நபர்களுக்கு இப்பாதிப்பு இருப்பதாக இந்நோய் மீதான பெரும்பாலான ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. பெரும்பாலான நோயாளிகள் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருப்பினும், இளவயது நபர்கள் மத்தியிலும் இப்பாதிப்பு ஏற்படும் நேர்வுகள் உயர்ந்து வருகின்றன. தேசிய அளவில் இப்பாதிப்புள்ள நோயாளிகளின் பதிவகம் இல்லாத நிலையில், குறிப்பாக இந்திய மக்களுக்கு பார்கின்சன் நோய்க்கான மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் ரீதியிலான இடர்-காரணிகள் பற்றி சில உள்நோக்குகளை மருத்துவ சமூகம் கொண்டிருக்கிறது. இந்தியாவின் சுகாதார பராமரிப்பு அமைப்பில் பெரும் பளுவை சுமத்தக்கூடிய ஒரு முக்கியமான, தொற்றுப்பரவல் இல்லாத, சீரழிவு நோயாக பார்கின்சன்ஸ் நோய் உருவெடுக்கும் என்பது ஒரு பெரிய அச்சுறுத்தல் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர்.

பார்கின்சன்ஸ் நோயால் அவதியுறுகின்ற நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக ஜெர்மனைச் சேர்ந்த மருத்துவப் பெரு நிறுவனமான எவர் பார்மாவால் தயாரிக்கப்படும் நவீன D-மைன் அபோமார்ஃபின் பம்ப்புகள் மற்றும் பேனாக்கள் (ஊசி மருந்துகள்) ஆகிய தயாரிப்புகள் செலிரா நியூரோசயின்சஸ் நிறுவனத்தால் சென்னை மாநகரில் இந்நிகழ்வின்போது அறிமுகம் செய்யப்பட்டன. ஐரோப்பாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இத்தகைய மூன்றாவது தலைமுறை அபோமார்ஃபின் – டெலிவரி கருவிகள், இப்போது சென்னையில் வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கிடைக்கின்றன.

கிலேரா நியூரோ சயின்சஸ் – ன் மருத்துவ இயக்குனர் டாக்டர். பாபு நாராயணன் பேசுகையில், “பார்கின்சன் நோய் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு இந்த நவீன ஐரோப்பிய தயாரிப்புகளான அபோமார்ஃபின் கருவிகள் இந்தியாவின் கிடைப்பது இதுவே முதன் முறையாகும். இதுவரை, இதற்கான சிகிச்சைக்கு அவர்களுக்கு இரு விருப்பத்தேர்வுகள் மட்டுமே இருந்தன: நோயின் ஆரம்ப நிலைகளுக்கு வாய் வழியாக உட்கொள்ளும் மாத்திரைகள் அல்லது நோய் முற்றிய நிலைகளுக்கு மூளையில் ஆழமான தூண்டல் அறுவைசிகிச்சை (DBS), ஆனால் இந்த அறுவைசிகிச்சைக்கு செலவு அதிகமாகும் மற்றும் 70 வயதுகள் மேற்பட்ட நோயாளிகளுக்கு இது பரிந்துரைக்கப்படுவதில்லை. இதுவரை நிலவிய இந்த இடைவெளியை D-மைன் பம்ப்புகள் மற்றும் ஊசிமருந்து பேனாக்கள் நிரப்புகின்றன; பார்கின்சன் நோய் மேலாண்மையில் ஒரு முக்கியமான மருத்துவ சிகிச்சை வாய்ப்பை இதன்மூலம் வழங்குகின்றன. இதுவரை கிடைத்து வந்த மருந்துகளினால் எதிர்பார்க்கப்பட்ட பயன்கள் கிடைக்காத நோயாளிகளுக்கு அல்லது வாய் வழியாக உட்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவுகளால் அவதியுறுகின்ற நபர்களுக்கு மிகச்சிறப்பான சிகிச்சை விளைவுகளை இவைகள் உறுதி செய்கின்றன,” என்று கூறினார்.

வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனையில் D-பம்ப்புகள் மற்றும் ஊசிமருந்து பேனா கருவிகளின் அறிமுக நிகழ்வில் லண்டனின் கிங்ஸ் காலேஜ் மருத்துவமனையில் நகர்வுத்திறன் கோளாறுகள் மற்றும் பார்கின்சன் நோய்க்கான உயர்சிகிச்சை மையத்தின் இயக்குனர் டாக்டர். வினோத் மேட்டா கலந்துகொண்டார். இந்நிகழ்வில் அவர் உரையாற்றியபோது, “லெவோடோப்பா என அழைக்கப்படும் மருந்து எதிர்பார்ப்பின்படி உகந்தவாறு செயல்படாத காலஅளவுகளின்போது அபோமார்ஃபின் சிகிச்சைமுறை நிவாரணம் அளிக்கிறது. இம்மருந்து செயல்படாததன் விளைவாக உடல்நடுக்கம், விரைப்புத்தன்மை மற்றும் சஞ்சல உணர்வு போன்ற அறிகுறிகள் நோயாளிகளுக்கு ஏற்படத் தொடங்குகின்றன. நோயாளிகளுக்கு தினசரி 50% இப்பாதிப்பு அறிகுறிகள் இல்லாத (off time) நேரம் இருப்பதை பல ஆய்வுகள் காட்டுகின்றன. தொடர்ச்சியான உட்செலுத்தலை மேற்கொள்ளும் பம்ப்பின் வழியாக அபோமார்ஃபின் தெரபி வழங்கப்படுவது, லெவோடோப்பா தேவையைக் குறைக்கிறது மற்றும் வாய் வழியாக உட்கொள்ளும் மருந்தின் தேவையை நீக்கிவிடுகிறது அல்லது கணிசமான அளவு குறைக்கிறது. அபோமார்ஃபின் தெரபி பெறும் நோயாளிகளிடம் மோட்டார் (உந்துவ) திறன்களில் காணப்படும் ஏற்ற இறக்கங்களும் மறைந்துவிடுகின்றன,” என்று கூறினார்.

சென்னை, வெஸ்ட்மினிஸ்டர் ஹாஸ்பிட்டல்ஸ் – ன் தலைவர் டாக்டர். அருண் குழந்தைவேலு இந்நிகழ்வில் பேசியபோது கூறியதாவது: ஐரோப்பாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் உலகத் தரத்திலான அபோமார்ஃபின் தெரபியை சென்னையிலுள்ள நோயாளிகளுக்கு D-மைன் பம்ப்புகள் மற்றும் ஊசிமருந்து பேனாக்கள் வழியாக வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவில் தற்போது கிடைக்கக்கூடிய அபோமார்ஃபின் பம்ப்புகள் நம்பகத்தன்மை குறைவாக இருப்பதோடு, நோயாளிகள் பயன்படுத்துவதற்கு எளிதானதாகவும் இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, அபோமார்ஃபினின் 20 குப்பிகள் வரை உடைத்ததற்குப் பிறகு அவைகளை நோயாளிகள் மறுநிரப்பல் செய்வது அவசியம்.

அதுவும் நடுங்குகின்ற கைகளைக் கொண்டு இதைச் செய்வது மிகவும் சிரமமானது. இதற்கு மாறாக, ஐந்து எளிமையான படிநிலைகளின் மூலம் D-மைன் அபோமார்ஃபின் பம்ப்புகளை நோயாளிகளே சுயமாக கையாளலாம். பம்ப்பில் நிரப்பும் செயல்முறை அதிக பாதுகாப்பு மற்றும் வசதியோடு மின்னியல் முறையில் கட்டுப்படுத்தப்படுகிறது. D-மைன் பம்ப்புகள் முன்பே நிரப்பப்பட்டதாக கிடைக்கின்றன மற்றும் அபோமார்ஃபினின் தொடர்ச்சியான உட்செலுத்தல் வசதியை வழங்குகின்றன. இதனால் 5 நிமிடங்களுக்குள் மருந்து உடலால் பிரயோகிக்கப்படுகிறது. பார்கின்சன்ஸ் நோயாளிகளுக்கு இதுவொரு மிகப்பெரிய வரப்பிசாதமாக, அவர்களது வாழ்க்கைத் தரத்தை ஆக்கப்பூர்வ தாக்கத்தை கொண்டிருப்பதாக நிச்சயம் இருக்கும்,” என்று கூறினார்.

பார்கின்சன்ஸ் பாதிப்புள்ள நோயாளிகள், உரிய காலஅளவுகளில் மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியம். அவர்களது உடலில் மருந்துகளின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படுவதற்கும் மற்றும் சீரற்றப் பலன்கள் கிடைப்பதற்கும் இது அநேக நேரங்களில் வழிவகுக்கிறது. தொடர்ச்சியான டோப்பாமினர்ஜிக் தெரபி என்பது, ஒரு தொடர்ச்சியான அடிப்படையில் டோபாப்பாமைனை உடல் பெறுகின்ற ஒரு வழிமுறையாகும். இதன் காரணமாக, மருந்துகளுடன் தொடர்புடைய ஏற்ற இறக்கங்கள், கணிசமான அளவு இல்லாமல் செய்யப்படுகின்றன. D-மைன் அபோமார்ஃபின் தொடர்ச்சியான உட்செலுத்தல் வசதியுள்ள பம்ப்புகள் மற்றும் ஊசிமருந்து பேனாக்கள் அறிமுகத்தின் மூலம் இதுவரை மேற்கத்திய நாடுகளில் மட்டுமே கிடைத்து வந்த தொடர்ச்சியான டோப்பாமினர்ஜிக் தெரபியினால் இந்திய நோயாளிகளும் பயனடையலாம்.

அப்போமார்ஃபின் தெரபி குறித்து விளக்கம் பெற 044-46276262 என்ற 24 மணி நேர ஹெல்ப்லைன் எண்ணை நோயாளிகள் அழைக்கலாம்.

Health