தமிழ்நாடு தூய்மை இந்தியா பணியாளர் நல சங்கம் சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ரவி மினிஹாலில் நடைபெற்ற கூட்டத்திற்கு தவசிமுத்து, முரளி, சௌமியா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற தங்களை ஆலோசனை கூட்டத்தில் முன் களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், மேலும் பணிநிரந்தரம், முழுமையான ஊதியம் கிடைக்க வழிவகை செய்தல், தமிழ் நாடு முழுதும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . இதில் ஏராளமான முன்களப் பணியாளர்கள் தமிழகம் முழுவதுமிருந்து கலந்து கொண்டனர் .