செங்கம் அருகே ஆடிப்பெருக்கு விழா ஆலயம் மூடி உள்ளதால் வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் பக்தர்கள் தவிப்பு

செங்கம் அருகே ஆடிப்பெருக்கு விழா ஆலயம் மூடி உள்ளதால் வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் பக்தர்கள் தவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயமான சென்னி அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும்

திருவண்ணாமலை கிருஷ்ணகிரி தர்மபுரி உள்ளிட்ட மூன்று மாவட்ட எல்லையில் அமைந்துள்ளதால் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆடி பெருக்கு தினத்தன்று ஒன்று கூடி தங்களது வேண்டுதல்களையும் நேர்த்திக் கடன் மற்றும் புதுமண தம்பதிகள் புது தாலி பிரித்து கோர்த்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுவதும் வழக்கம் கடந்த ஆண்டு முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் இந்த ஆண்டு தளர்வுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தும் சுவாமி தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதித்து தரிசனத்திற்கு தடை செய்யப் பட்டுள்ளதால் இங்கு வருகின்ற பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர் இதனால் தனியாக சிலை அமைத்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் பொங்கல் வைத்தும் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர்
மேலும் ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதால் இங்கு வருகின்ற பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்

மேலும் இயல்பு நிலைக்கு திரும்பிட வேண்டுமென பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

District News