கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சவேரியார்பாளையம் கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள் பொரசப்பட்டு கிராம எல்லையில் அரசுக்கு சொந்தமான மலைக்குன்றில் கெபி எனும் சிறு வழிபாட்டு தலத்தை நிறுவி வழிபாடு செய்து வந்த நிலையில் போரசபட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வருவாய்த்துறையில் கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து முன் அனுமதியின்றி அரசுக்கு சொந்தமான மலையில் கட்டப்பட்ட கிறிஸ்தவ வழிபாட்டு தலம் அகற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து இன்று அதே இடத்தில் வருவாய்துறை மற்றும் காவல் துறையின் வழிகாட்டுதல்படி வழிபாடு செய்யலாம் என திமுகவின் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் கூறினார் உடன் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மற்றும் வருவாய்க் கோட்டாட்சியர் எஸ் சரவணன் (பொறுப்பு), வருவாய் வட்டாட்சியர் சையத் காதர் திருக்கோவிலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கங்காதரன் மற்றும் கிராம அலுவலர்கள், காவல்துறையினர் உடன் இருந்தனர் இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்துவ சமூகத்தினர் சவேரியார் பாளையம் கோயில் அருகே 3 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வருவதை அடுத்து அங்கு கூடியிருந்தனர்.