திருவொற்றியூரை அடுத்த மணலி மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ஆயிரம் மாணவ மாணவிகளை சேர்த்து சாதனை

திருவொற்றியூரை அடுத்த மணலி மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ஆயிரம் மாணவ மாணவிகளை சேர்த்து சாதனை

தமிழக அரசு மாநகராட்சிஅரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகம் மடிக்கணினி சீருடை உள்ளிட்ட பல சலுகைகளை செய்துவரும் நிலையில் அவர்களது வாழ்வாதாரம் மேம்பட கல்வியிலும் சிறந்து விளங்க பல முயற்சிகள் எடுத்து அனைவரையும் அரசு பள்ளியில் சேர்க்கும் படி அறிவுறுத்தி வரும் நிலையில்

மணலி பாடசாலை தெருவில் மாநகராட்சி ஆரம்ப பள்ளி உள்ளது இங்கு 19 ஆசிரியர்கள் மூலம் கடந்த கல்வியாண்டி ஆண்டு வரை 749 மாணவ மாணவியர்கள் படித்து வந்தனர் இந்த கல்வி ஆண்டில் கூடுதலாக மாணவ மாணவிகள் சேர்க்கப்பட்டு ஆயிரம் மாணவர்களை சேர்த்து சாதனை புரிந்துள்ளனர் மனைவியை சுற்றி ஏராளமான தனியார் பள்ளிகள் இருந்துவரும் நிலையில் தொழிற்சாலை நிகழ்ந்த பகுதியான மணலியில் தனியார் பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்காமல் அரசுப்பள்ளியில் சேர்த்தால் மாணவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும்

திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி ஆயிரமாவது மாணவர் சேர்க்கையை துவக்கி வைத்தார் இதன்படி ஆயிரமாவது மாணவர் சேர்க்கை நிகழ்ச்சி இன்று பள்ளியில் வளாகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் லூர்து மேரி பதவி பொறுப்பு தலைமை வகித்தார் . ஆசிரியர் ராஜசேகர் வரவேற்றார். பெற்றோர் கழக தலைவர் புண்ணியகோட்டி முன்னிலை வகித்தார். .நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் கோபாலகிருஷ்ணன் ,வட்டார கல்வி அலுவலர் ராஜேந்திரன், வட்டார வள மேற்பார்வையாளர் ராஜேந்திரன் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Education