சென்னையில் உள்ள சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் உள்ளே புகுந்து சமீபத்தில் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு (கோ)செய்தியாளர்கள் சங்கம் தமிழ்நாடு பத்திரிகை செய்தியாளர்கள் நலவுரிமைச் சங்கம், அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் மித்ரன் மீடியா அசோசியேஷன் ஆகிய சங்கங்களின் அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு( கோ) செய்தியாளர்கள் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் தமிழ்நாடு பத்திரிக்கை செய்தியாளர்கள் நலவுரிமைச் சங்கத்தின் தலைவர் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு கோவை செய்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.ஜான் மற்றும் பொருளாளர் ஜி. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவாக சதீஷ் நன்றி கூறினார். முன்னதாக கிருஷ்ணமூர்த்தி, துரை,கோவை ஷ்யாம்,சுரேஷ், கணேஷ் பாபு, ரவி உள்ளிட்ட பலர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். தமிழ்நாடு முழுவதும் சென்னை, திருச்சி, இராமநாதபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் கண்டன சுவரொட்டிகள் தமிழ்நாடு(கோ)செய்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒட்டப்பட்டது. இதுதவிர தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் சங்கத்தின் அங்கத்தினர்கள் சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தை தாக்கிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்க உள்ளனர்.