பெருநகரங்களில் மட்டுமே நடத்தும் புத்தக கண்காட்சி தற்போது செங்கத்தில் நடைபெறுவதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி

பெருநகரங்களில் மட்டுமே நடத்தும் புத்தக கண்காட்சி தற்போது செங்கத்தில் நடைபெறுவதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பாரதி புத்தகாலயம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் புத்தக கண்காட்சியினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி திறந்து வைத்தார்.
இந்த புத்தக கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட தலைப்புகளான புத்தகங்கள் மாணவர்கள் பயன்பெறும் வகையிலான அறிவியல் கண்டுபிடிப்பிற்கான அறிவியல் புத்தகங்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளருக்கான புத்தகம் நிலம் பூத்து மலர்ந்த நாள் – உரக்கப்பேசு – விண்வெளி மனிதர்கள் – கியுபாவின் மருத்துவ புரட்சி உஷ்னராசி நீர்கோழி என 10000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிக்காகவும் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பெருநகரங்களில் மட்டுமே இதுபோன்ற புத்தக கண்காட்சி நடைபெறும் எனவும் இது போன்ற நகரங்களில் நடைபெறும் புத்தககண்காட்சியால் தாங்கள் பெருநகருங்களுக்கு சென்று சிரமப்பட்டு வாங்கும் புத்தகங்கள் இப்பகுதிகளிலே சுலபமாக கிடைப்பது பெரும் மகிழ்;ச்சி அளிப்பதாக புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தோர் கூறுகின்றனர்.
மேலும் இன்றும் நாளையும் நடைபெறம் இந்த புத்தக கண்காட்சியில் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி இருந்ததாகவும் இதேபோன்று புத்தகண்காட்சி வருடந்தோறும் நடத்தவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

District News