சென்னையை அடுத்த பெரும்பாக்கம் சோழிங்கநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் முன்னாள் இறைச்சி கடை ஒன்றில் பணியாற்றி வந்த சமீர் பாஷா என்ற நபர் மீது முக கவசம் அணிய வில்லை என்ற காரணத்திற்காக ரோந்து பணியில் இருந்த காவலர் சரமாரியாக தாக்கி கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை இறைச்சி வியாபாரிகள் சங்கம் வரவேற்பதாகவும் ஆனால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் இறைச்சிக்கடை ஊழியருக்கு நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் சம்பளத்தை வைத்து அவ்வாறு எப்படி குடும்பம் நடத்த இயலும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்
தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவருடைய மருத்துவச் செலவிற்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அரசு அல்லது தாக்கப்பட்ட காவலரிடம் இருந்து உரிய இழப்பீடு தொகையை அரசு பெற்றுத் தர வேண்டும் என சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட அனைத்து இறைச்சி வியாபாரிகள் நல சங்கம் சார்பிலும் திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் இந்திய தேசிய லீக் கட்சி சார்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது