திருவொற்றியூரில் ரூ, 35 கோடியில் ரயில்வே சுரங்கப் பாதை திட்டம். எம்பி ,எம்எல்ஏ ஆய்வு செய்தனர்

திருவொற்றியூரில் ரூ, 35 கோடியில் ரயில்வே சுரங்கப் பாதை திட்டம். எம்பி ,எம்எல்ஏ ஆய்வு செய்தனர்

.

சென்னை, திருவொற்றியூர்,ஆக, 8- சென்னை, திருவொற்றியூர் பகுதியில், ரூ, 35 கோடி செலவில், ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்தை, எம்பி, எம்.எல்.ஏ ஆய்வு செய்தனர்.

சென்னை, திருவொற்றியூர் கிராமத்தெரு ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க கடந்த 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது திட்டமிடப்பட்டது.ஆனால் அதற்கு பிறகு வந்த அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்ததையொட்டி11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த ரயில்வே சுரங்கப் பாதை திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு சுமார் 35 ரூபாய் கோடி செலவில் இதற்கான திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த ரயில்வே சுரங்கப் பாதை மற்றும் பொருட்களை சேமிக்கும் கிடங்கு ஆகியவற்றை அமைக்க இந்தப் பகுதியில் உள்ள ரயில்வே துறைக்கு சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கையகப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளன.இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்படையக் கூடிய சூழ்நிலை உருவாகியது.இந்நிலையில் நேற்று கையகப்படுத்த வேண்டிய இடங்களை ஆய்வு செய்ய ரயில்வே துறை உயர் அதிகாரிகள் கிராமத் தெரு ரயில்வே கேட் பகுதிக்கு வந்தனர். அப்போது கலாநிதி வீராசாமி எம்பி,கே.பி.சங்கர் எம்எல்ஏ ஆகியோர் அங்கு வந்து மக்கள் குடியிருக்கும் இடங்களை கையகப்படுத்தி தினால் சுமார் 200 குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுரங்கப்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ரயில்வே துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சுரங்கப்பாதை அமைக்க தேவையான நிலங்களை மட்டும் கையகப்படுத்தி பணிகளை விரைவாக துவக்குவது என்றும் மக்கள் வசிக்கும் ரயில்வே துறைக்கு சொந்தமான இடங்களை கையகப்படுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. பகுதி செயலாளர் தி.மு.தனியரசு, கிராமத் தலைவர் அரவிந்த் ஆறுமுகம் திமுக நிர்வாகிகள் ஆதி குருசாமி ,குமரேசன் மற்றும் நெடுஞ்சாலைத் துறை ,வருவாய் துறை, மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Political