எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பயிற்சி

எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பயிற்சி வழங்கி முன் மாதிரி பள்ளிகளாக மாற்றுவேன் என சட்ட மன்ற உறுப்பினர் பரந்தாமன் பேட்டி.

எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று 12ஆம் வகுப்பில் உயர்மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டி ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் பள்ளி மாணவிகளின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் பயிற்சி தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள பி.டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.இவ்விழாவில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்.

மேடை பேச்சு
அண்ணா முதல்வராக இருந்த போதும் கலைஞர் முதலமைச்சராக இருந்த கால கட்டத்திலும், மு க ஸ்டாலின் அவருடைய ஆட்சியில் பெண்களுக்கான முன்னேற்றத் திட்டங்களை கொண்டு வரக்கூடிய ஒரு அரசும் ஆட்சியும் திமுக மட்டும்தான் என அவர் கூறினார்…
சொத்தில் பெண்களுக்கு சம உரிமை கொண்டு வந்த ஆட்சியும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி எனவும் பெண்கள் கல்வி பெற வேண்டும் என்பதற்காக ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பெண்கள் மட்டும் ஆசிரியைகள் பணியமர்த்தப்பட வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்த அரசு இந்த அரசு திமுக எனவும்
அதேபோல் உள்ளாட்சி மன்றங்களில் 30% இடஒதுக்கீடு தந்து பகுதிக்கு ப நீங்கள் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேண்டும் என்று ஊராட்சிகளில் கிராம புறங்களில் மாநகராட்சிகளில் 30 சதவீதம் பெண்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்று பொது சேவை செய்ய திட்டத்தை கொண்டு வந்தது திமுக அரசு எனவும் அவர் கூறினார்…
அதேபோல் மகளிகர் சுயமாக முன்னேற பணிபுரியும் மகளிகளுக்கான விடுதி அமைத்து தந்தவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று அவர் தெரிவித்தார்…..

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்:
எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் +2 பயின்று முதல் மதிப்பெண் எடுத்த 20 மாணவிகளுக்கு இன்று உதவி தொகை வழங்கப்பட்டதாகவும், அடுத்த 5 ஆண்டுகளுக்கும் தொடர்ச்சியாக மாணவிகளுக்கு உதவி வழங்கப்படும் என்றார்.

மேலும் இந்த மாணவிகள் போட்டி தேர்வுகளில் பங்கேற்ற விரும்பினால் அதற்கான பயிற்சிகளும் வழங்கப்படும் என்றார்.

தனியார் அமைப்பு மூலம் மாணவிகளுக்கு ஆங்கில திறன் மேம்பாடு பயிற்சி வழங்க உள்ளதாகவும் அப்போது தெரிவித்தார்.

எழும்பூர் சட்டமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்றவர் , ஆங்கில மொழித்திறன் மேம்பாடு மற்றும்
பெண்களுக்கான திறன் மேம்பாடு ஆகியவற்றிக்கான பயிற்சி எழும்பூரில் உள்ள அனைத்து அரசு பள்ளியிலும் மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு விளையாட்டு துறையில் சாதிக்கும் வகையில் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் போது அவர் கூறினார்….

District News